கடலூரில் மணமுடிக்க மறுத்த மாணவி கல்லூரி வாசலில் கொலை

கடலூரில் மணமுடிக்க மறுத்த கல்லூரி மாணவியை அவரது தாய்மாமன்  குத்திக் கொலை செய்தார். கழுத்தை அறுத்து கொலை செய்த பின், கத்தியுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை நடந்த இந்த கொலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore Murder:  A college student was murdered by her close Relative in front of her college in Cuddalore
மகாலெட்சுமி (21)
Cuddalore Murder:  A college student was murdered by her close Relative in front of her college in Cuddalore
தமிழ்ச்செல்வன் (32)

கடலூர் மாவட்டத்தில் உள்ள, காடாம்புலியூர் அருகே இருக்கும் காட்டாண்டி குப்பம் என்ற ஊரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். தர்மலிங்கத்தின் மகள் மகாலெட்சுமி (21). கடலூரில் உள்ள மஞ்சக்குப்பத்தில் கல்லூரி ஒன்றில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகாலட்சுமியினுடைய முறைமாமன் தமிழ்ச்செல்வன் (32). இவர் கடலூரில் உள்ள பச்சையாங்குப்பம் என்ற பகுதியை சேர்ந்தவர். சிறு வயதில் முதல் இவ்இருவரும் நெருக்கமாக பழகி வந்திருகின்றனர். அப்பழக்கத்தில் தம்மை மணம் முடித்து கொள்ளுமாறு தமிழ்ச்செல்வன் வற்புறுத்தி வந்திருக்கிறார். இதை மகாலட்சுமி கண்டும்காணாமல் இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், நேற்று கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் கலந்து விட்டு தோழிகளுடன் மதியம் மகாலட்சுமி வீட்டுக்கு கிளம்பினார்.

கல்லூரி வாசல் முன் வந்த மகாலக்ஷ்மியை தமிழ்ச்செல்வன் திடீரென இருசக்கர வாகனத்தில் வந்து வழி மறித்தார். தன்னுடன் வருமாறு அழைத்தார். இவர் அதை மறுக்கவே, தன்னை திருமணம் செய்து  கொள்ள மறுக்கும் மகாலட்சுமியை ஆத்திரத்துடன் கத்தியால் தோள் பட்டையில் குத்தினார். இதை எதிர்பார்க்காத மகாலட்சுமி பயங்கரமாக அலறினார். அங்கே அருகில் வந்துகொண்டிருந்த தோழிகளும் இதை தடுக்க முயற்சி செய்தனர். எனினும் அவர்களையும் தான் கொன்று விடுவேன் என மிரட்டி விரட்டியிருக்கிறார் தாய்மாமன் தமிழ்ச்செல்வன். இதற்கிடையே, இதற்கு இடையே தோளில் பாய்ந்த கத்தியை உருவி  வெளியே எடுக்க முடியாததால் தான் தயாராக கொண்டு வந்த மற்றொரு கத்தியினால் மகாலட்சுமியினுடைய கழுத்தை தமிழ்ச்செல்வன் கொடூரமாக வெட்டினார். இதனால், ரத்த வெள்ளத்தில் மாணவி மகாலட்சுமி துடிதுடித்து பலியானார். இதனால், கோபமடைந்த  அடைந்த சகமாணவர்கள் சிலர், தமிழ்ச்செல்வனை நோக்கி கற்களை வீசி தாக்கினார்கள்.

மாணவர்களிடம் இருந்து தப்பி சென்று, குத்திய கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தமிழ்ச்செல்வன் புதுநகர் காவல் நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு காவல்துறையினரிடம் குத்திய கத்தியுடன் சரணடைந்தார். தமிழ்ச்செல்வனை கைது செய்த காவல் துறையினர் அவரது இருசக்கர வாகனம் மற்றும் குத்திய கத்தியை பறிமுதல் செய்தார்கள். காவல்துறையினர் விசாரணை செய்ததில், தமிழ்ச்செல்வன் ஒருதலைக் காதலால் தனது முறை பெண்ணை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதனிடையே,கழுத்து அறுபட்டு கொல்லப்பட்ட மாணவி மகாலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்ய கடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. கல்லூரி வாசலிலேயே மாணவி மகாலட்சுமி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்படுவதை கண்ட ஏனைய மாணவிகள் கதறி அழுதார்கள். ரத்தம் கழுத்தில் இருந்த பீச்சி அடித்து மாணவி மகாலட்சுமி துடிதுடித்து உயிர் துறந்ததை கண்ட தோழிகள் சிலர் அங்கே மயங்கி விழுந்தனர். மயங்கி விழுந்த மாணவிகளை சக கல்லூரி மாணவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். இந்த கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

English summary:

Cuddalore Murder

Cuddalore Murder:  A college student was murdered by her close Relative in front of her college in Cuddalore. The accused is her own mother’s brother who was in love with her from childhood days.

Related posts