கடலூரில் மணமுடிக்க மறுத்த மாணவி கல்லூரி வாசலில் கொலை

கடலூரில் மணமுடிக்க மறுத்த கல்லூரி மாணவியை அவரது தாய்மாமன்  குத்திக் கொலை செய்தார். கழுத்தை அறுத்து கொலை செய்த பின், கத்தியுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை நடந்த இந்த கொலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள, காடாம்புலியூர் அருகே இருக்கும் காட்டாண்டி குப்பம் என்ற ஊரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். தர்மலிங்கத்தின் மகள் மகாலெட்சுமி (21). கடலூரில் உள்ள மஞ்சக்குப்பத்தில் கல்லூரி ஒன்றில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகாலட்சுமியினுடைய முறைமாமன் தமிழ்ச்செல்வன் (32). இவர் கடலூரில் உள்ள பச்சையாங்குப்பம் என்ற பகுதியை சேர்ந்தவர். சிறு வயதில் முதல் இவ்இருவரும் நெருக்கமாக பழகி வந்திருகின்றனர். அப்பழக்கத்தில் தம்மை மணம் முடித்து கொள்ளுமாறு தமிழ்ச்செல்வன் வற்புறுத்தி வந்திருக்கிறார். இதை மகாலட்சுமி கண்டும்காணாமல் இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், நேற்று கல்லூரியில் நடந்த ஒரு…

Read More