மனைவியை தெருவில் தாக்கி நிர்வாணமாக்கிய குடிகார கணவன் கைது

police arrested a 30 year old drunken man for stripping and assaulting his 28 year old wife after suspecting her at  Bhiwandi in Maharashtra.

police arrested a 30 year old drunken man for stripping and assaulting his 28 year old wife after suspecting her at  Bhiwandi in Maharashtra.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் குடிபோதை தலைக்கு ஏறி தனது மனைவியை தெருவுக்கு இழுத்து வந்து நிர்வாணமாக்கி கூர்மையான ஆயுதத்தினால் தாக்கிய குடிகார கணவன் காவல்துறையினரால் கைது செய்யபட்டான்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் பிவான்டியைச் சேர்ந்த குடிகாரன் கமால் அன்சாரி(வயது 30). அவனுக்கு  தனது 28 வயது மனைவியின் நடத்தை மேல் திடீரென சந்தேகம் உண்டானது. இந்த நிலையில் குடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த அன்சாரி தனது மனைவியை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்தான். பின்னர் தெருவிலே, அவரை நிர்வாணமாக்கி கூர்மையான ஓர் ஆயுதத்தை வைத்து அவருடைய உடலில் பல இடங்களில் குத்தி கிழித்தான்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு பிவான்டியில் இருக்கும் இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் குடிகாரன் கணவன் அன்சாரி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவனுக்கு கடுமையான தண்டனை வாங்கி தரக்கோரி உள்ளூரைச் சேர்ந்த என்.ஜி.ஓ வான ஜாகோ வை சேந்தவர்கள் பிவான்டி ஜாகோ துணை கமிஷனர் அலுவலகம் முன்னர் நேற்று போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து காவதுறையினர் குடிகாரன் அன்சாரியை நேற்று கைது செய்தார்கள்.

police arrested a 30 year old drunken man for stripping and assaulting his 28 year old wife after suspecting her at  Bhiwandi in Maharashtra.

Related posts