தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளுக்குப் பின் நிர்வாக மாற்றம்.

10 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நிர்வாக மாற்றம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
பி.எஸ். ஞானதேசிகன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திரிவேதி வெளியிட்டார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன், ஹெச்.வசந்தகுமார் உள்பட 17 பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர்களாக 29 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக கோவை தங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களாக 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் ஜி.கே. வாசன், ப. சிதம்பரம், சுதர்சன நாச்சிப்பன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் அடங்கிய செயற்குழுவில் மொத்தம் 43 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.எஸ். ஞானதேசிகன் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இந்தத் தகவலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் துவிவேதி சனிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

துணைத் தலைவர்கள்: அரிமளம் சுந்தரராஜன், வீ.ஆர். பகவான், சாருபாலா தொண்டைமான், ஈரோடு ஆறுமுகம், ஞானசேகரன், கே.எஸ். கோவிந்தராஜன், எம்.என். கந்தசாமி, கே. கந்தசாமி, பி.என். நல்லுசாமி, புஷ்பராஜ், டி. சதாசிவலிங்கம், ஏ.பி.சி.வி. சண்முகம், சுஜாதா, ஆர். தாமோதரன், ஹெச்.  வசந்தகுமார், பி.ஆர்.எஸ். வெங்கடேசன், தாரா ஷஃபீ.

பொதுச் செயலாளர்கள்: பாலசுப்ரமணியன் (சேலம்), என். பாலசுப்பிரமணியன், ஏ. சந்திரசேகர், சிரஞ்சீவி, ஜி.கே. தாஸ், ஜெயச்சந்திரன், எஸ். ஜெயசிம்மா, எம். ஜோதி, கீழானூர் ராஜேந்திரன், சி.டி. மெய்யப்பன், நாசே ராமச்சந்திரன், எம். பழனிவேல், ஜி. ராஜேந்திரன், ஏ.எஸ். சக்திவடிவேல், டி. செல்வம், சாஸ்திரி ஸ்ரீநிவாஸன், சி.ஆர். சுந்தர்ராஜன், எம். சுந்தரம், தாம்பரம் நாராயணன், கே. தணிகாசலம், வேணுகோபல் (எ) மாறன், விடியல் சேகர், விஜயன், ஹஸன் அலி, வனமாலை, வி.எம். தங்கவேல், ஜி. சுந்தரவடிவேலு,  டாக்டர் விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார்.

செயற்குழு உறுப்பினர்கள்: பி.எஸ். ஞானதேசிகன், ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், கோபிநாத், எஸ். ஆர் பாலசுப்ரமணியன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி. தங்கபாலு, குமரி அனந்தன், எம். கிருஷ்ணசாமி, ஆர். பிரபு, ஜெயக்குமார், சு. திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், தனுஷ்கோடி ஆதித்தன், மணி சங்கர் அய்யர், என்.எஸ்.வி. சித்தன், ஹாரூண் ரஷீத், எஸ்.எஸ். ராமசுப்பு, பி. விஸ்வநாதன், கே.எஸ் அழகிரி, மாணிக் தாக்கூர், எஸ்.ஜி. விநாயகமூர்த்தி, கே. பாரமலை, ஜி.ஆர். மூப்பனார், எஸ்.கே. கார்வேந்தன். கே. ராணி வெங்கடேசன், ராணி, டி. யசோதா, எஸ். பீட்டர் அல்போன்ஸ், அன்பரசு, ஜி.ஏ. வடிவேலு, டாக்டர் வல்லள் பெருமான், கே.ஆர். ராமசாமி, அப்துல் காதர், ஆர்.பி. உலகநம்பி, ஜி.எஸ். தனபதி, டி.கிருஷ்ணசாமி வாண்டையார், மகேஷ்வரி, ஓ.ஏ. வாமணன், நஞ்சப்பன், எல். முத்துகுமார்.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள்: ராயபுரம் ஆர்.மனோ (வட சென்னை), ரங்க பாஷியம் (மத்திய சென்னை), ஆர்.கே. வெங்கட் (தென் சென்னை), ஏ.ஜி. சிதம்பரம் (வடக்கு திருவள்ளூர்), பி.ஜேம்ஸ் (தெற்கு திருவள்ளூர்), எஸ்.டி. செழியன் (வடக்கு காஞ்சிபுரம்),  விஜயகுமார் (தெற்கு காஞ்சிபுரம் ), குலாமுதீன் (வடக்கு விழுப்புரம்), இளையராஜா (தெற்கு விழுப்புரம்), முத்தாண்டிக்குப்பம் ராதாகிருஷ்ணன் (வடக்கு கடலூர்), புரட்சி மணி (தெற்கு கடலூர்), எம். வசுந்தராஜ் (வடக்கு திருவண்ணாமலை), என்.எம். மணிவர்மா (தெற்கு திருவண்ணாமலை), கே. ஸ்ரீநிவாஸ காந்தி (வேலூர் நகரம்), ஜி. ஹரி (கிழக்கு வேலூர்), ராம்கோபால் (மேற்கு வேலூர்), ராஜா குமராவேல் (கிருஷ்ணகிரி), ஏ.வி. இளங்கோவன் (தருமபுரி), ஜி. ஜெயபிரகாஷ் (சேலம் நகரம்), எஸ்.கே. செல்வராஜ் (கிழக்கு சேலம்), பி.கோபால் (மேற்கு சேலம்), இ.பி. ரவி (ஈரோடு நகரம்), விஜய் குமார் (தெற்கு ஈரோடு), எஸ். வி. சரவணன் (வடக்கு ஈரோடு), கிருஷ்ணன் (திருப்பூர் நகரம்), பி. கோபி (திருப்பூர் புறநகர்), வி.எம்.சி. மனோகரன் (கோவை நகரம்), ஆர். கணேசன் (நீலகிரி), பேங்க். கே. சுப்ரமண்யம் (கரூர்), ராமதாஸ் (கிழக்கு திண்டுக்கல்), ராசியப்பன் (மேற்கு திண்டுக்கல்), முருகேசன் (தேனி), சேது ராமன் (மதுரை நகரம்), ரவிச்சந்திரன் (வடக்கு மதுரை), உசிலம்பட்டி பிரபாகர் (தெற்கு மதுரை), ஜெரோம் ஆரோக்கியராஜ் (திருச்சி நகரம்),  எம். ராஜசேகரன் (வடக்கு திருச்சி), சுபா சோமு (தெற்கு திருச்சி),  எம்.என். ராஜா (பெரம்பலூர்), எஸ்.ஆர்.எம். குமார் (அரியலூர்), ராம்குமார் (வடக்கு தஞ்சாவூர்), அந்தோனி சாமி (தெற்கு தஞ்சாவூர்), பி.வி. ராஜேந்திரன் (தெற்கு நாகப்பட்டினம்), தினகரன் (திருவாரூர்), டி. புஷ்பராஜ் (புதுக்கோட்டை), சத்தியமூர்த்தி (சிவகங்கை), ரவிச்சந்திர ராமவன்னி (ராமநாதபுரம்), எஸ். வேலாயுதம் (விருதுநகர்), ஏடிஎஸ் அருள் (தூத்துக்குடி நகரம்), ஆர். கதிர்வேல் (வடக்கு தூத்துக்குடி), விஜயசீலன் (தெற்கு தூத்துக்குடி), ராமநாதன் (திருநெல்வேலி நகரம்), ஏ. தமிழ்ச் செல்வன் (கிழக்கு திருநெல்வேலி), அய்யாதுரை (மேற்கு திருநெல்வேலி).

இதனிடையே, கன்னியாகுமரி உள்பட 7 மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களின் பெயர்கள் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts