இந்தியாவின் தலைநகர் தில்லியில் ஊழலை எதிர்த்து போராடி ‘ஆம்ஆத்மி’ எனும் அரசியல் கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கினார். தில்லியில் சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.
அக்கட்சி முதல்–மந்திரி வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை அறிவித்தது. இதனையடுத்து புதுடெல்லி தொகுதியில் முதல்–மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார்.
இங்கு ஓட்டு எண்ணிக்கையில் முதலில் ஷீலா தீட்சித் முன்னணியில் இருந்தார். ஆனால் அடுத்து கெஜ்ரிவால் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணிக்கு வந்தார்.
தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் 1500 ஓட்டுகள் முன்னணியில் இருக்கிறார். முதல்–மந்திரி ஷீலா தீட்சித் தோல்வி முகத்தில் உள்ளார்.
பாரதீய ஜனதாவின் முதல்–மந்திரி வேட்பாளர் ஹர்ஷ்வர்த்தன் கிருஷ்ணா நகர் தொகுதியில் 5,000 ஓட்டுகள் முன்னணியில் உள்ளார்.
லட்சுமி நகர் தொகுதியில் மந்திரி ஏ.கே.வாலியா பின்தங்கிய நிலையில் உள்ளார்.
இதே போல் இரண் வாலியா, ஹருண்யுசுப், ராஜ்குமார் சவுகான் ஆகிய மந்திரிகளும் தோல்வி முகத்தில் உள்ளனர்.