Rupees 6 crores compensation for Medical Negligence
கடந்த 1998ம் ஆண்டு கோல்கட்டா தனியார் மருத்துவமனையில் தவறான மருத்துவ சிகிச்சையினால் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அந்த பெண்ணின் கணவருக்கு 5.96 கோடி ருபாய் நஷ்டஈடு வழங்க உச்ச நீதிமன்றம், மருத்துவம் அளித்த தனியார் மருத்துவமனைக்கும், சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாதயா,வி.கோபால கவுடா ஆகியவர்கள் அடங்கிய அமர்வு, மருத்துவமனையினுடைய தவறான மருத்துவ சிகிச்சையால் அனுராதா உயிரிழந்ததற்காக, அவருடைய கணவர் குணால் சஹாவுக்கு 5.96 கோடி ருபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று குமாறு உத்தரவு பிரபிக்கபட்டது. இந்த தொகையை எட்டு வாரங்களுக்குள், 6% வட்டியுடன் கொடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
இந்த நஷ்டஈட்டுத் தொகையில் மருத்துவர்கள் சுகுமார் முகர்ஜியும் பல்ராம் பிரசாத்தும் தலா 10 லட்சம் ருபாய் வழங்க வேண்டும்; மற்றொரு மருத்துவர் வைத்தியநாத் 5 லட்சம் ருபாய் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவ சிகிச்சை சார்ந்த நுகர்வோர் வழக்குகளில் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
மருத்துவ சிகிச்சை சார்ந்த நுகர்வோர் வழக்குகளில் மருத்துவ சிகிச்சையில் அலட்சிய போக்கு காரணமாக நிகழும் மரணத்திற்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
Rupees 6 crores compensation for Medical Negligence
Rupees 6 crores compensation for Medical Negligence Supreme Court Ordered the Hospital and 3 other doctors