Climber finds treasure from Indian air crash on Mont Blanc
இந்திய நபருக்கு சொந்தமான புதையலை ஆல்ப்ஸ் மலையில் பிரான்ஸ் நாட்டு வாலிபர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
பிரான்ஸ்–இத்தாலி நாட்டு எல்லையில் அமைந்துள்ள சிகரத்தில் ஏறிய பிரான்சு நாட்டு வாலிபர் ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது.
பனிக்கட்டியால் ஆன அந்த சிகரத்தில் சிரமத்துடன் ஏறிய அவருக்கு பழங்கால பெட்டியில் விலை உயர்ந்த ஆபரண கற்கள் அடங்கிய புதையில் கிடைத்தது.
அந்த பெட்டியில் இருந்த மரகதம், மாணிக்கம் மற்றும் நீல நிற கற்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த புதையலை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அந்த வாலிபர் ஒப்படைத்துள்ளார்.
அந்த கற்களில் அவை இந்தியாவில் செய்யப்பட்டவை என்று பொறிக்கப்பட்டு இருந்தது.
50 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1950 மற்றும் 1966ம் ஆண்டுகளில் இரு ஏர் இந்தியா விமானங்கள் அந்த மலைச்சிகரத்தில் மோதி சிதறின. அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிர் இழந்து பனிப்பாறைக்குள் சமாதி ஆனார்கள்.
அந்த பயணிகளின் உடைமைகளும் அவர்களுடன் புதைந்துவிட்டன. தற்போது மலையேறும் வாலிபரிடம் கிடைத்தது அந்த பயணிகளில் ஒருவருடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து இந்திய அரசுக்கு பிரான்சு அரசு தகவல் கொடுத்து அந்த பெட்டி பற்றிய விவரங்களை கேட்டு உள்ளது.
இந்தியாவில் அந்த புதையலுக்கான உரிமையாளர் கண்டு பிடிக்கப்படாவிட்டால் பிரான்சு நாட்டு சட்டப்படி அதைக் கண்டெடுத்த மலையேறும் வாலிபருக்கே அது சொந்தமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதையலை கண்டதும் நேராக பொலிசாரிடம் ஒப்படைத்த அந்த வாலிபரின் நேர்மையை பொலிசார் பாராட்டியுள்ளார்கள்.
Climber finds treasure from Indian air crash on Mont Blanc
இதையும் படியுங்கள்
- காரைக்கால் கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
- பஞ்சாபில் இளம்பெண்ணை கொலை செய்த குடும்பம்
- போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
- தமிழக மீனவர்கள், கச்சத்தீவு வழக்கு: இலங்கை கடல் எல்லையைத் தாண்டாதவாறு விழிப்புணர்வு தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
← முந்தைய செய்தி: போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது
அடுத்த செய்தி →: காரைக்கால் கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

