மும்பை: மகாராஷ்டிராவில் மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நடைபெற்றது .வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் பெண் துறவி பிராக்யா சிங் தாகூர்,ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபத்யாய உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
ஜாமினில் வெளிவந்த பிராக்யா சிங் தாகூர் நடந்துவரும் மக்களவை தேர்தலில் போபால் தொகுதியின் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.இன்று மும்பையில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி விநோத் பதால்கர் முன் விசாரணைக்கு வந்தது.குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் நேரில் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இனி குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரும் வாரம் ஒருமுறை கட்டாயம் நீதிமன்றத்தில அஜராக வேண்டும் என்று நீதிபதி விநோத் பதால்கர் உத்தரவிட்டார். பிறகு வழக்கு விசாரணையை மே 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.