சீன இராணுவ(PLA) துருப்புக்கள் இந்திய எல்லைக்குள் உள்ளே 10 கிமீ ஊடுருவல்

ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங்.

Troops of  of China intruded 10-km inside the Indian territory

24 April 2013: சீன இராணுவ (PLA) துருப்புக்கள் இந்திய எல்லைக்குள் உள்ளே 10 கிமீ ஊடுருவல்.  எல்லையில் ராணுவ தலைமை தளபதி ஆய்வு.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சீன ஊடுருவல் நிகழ்ந்த பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இந்தியப் படைப்பிரிவுகளை புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார் இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு Daulat Beg Oldi (DBO) பகுதியில் சீன ராணுவத்தினர் கூடாரம் அமைத்தது கண்டறியப்பட்ட உடனே அப்பகுதிக்கு லடாக் ஸ்கவுட்ஸ் படைப்பிரிவினரை இந்தியா அனுப்பி வைத்தது. பதற்றம் நிறைந்த இந்த சூழ்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள விக்ரம் சிங் திங்கள்கிழமை ஜம்மு காஷ்மீருக்கு சென்றார்.

ஆளுநர் என்.என்.வோராவைவும் முதல்வர் ஒமர் அப்துல்லாவையும் சந்தித்து சீனா மேற்கொண்ட ஊடுருவல் குறித்தும் அங்கு தற்போதுள்ள நிலைமை குறித்தும் விரிவாக விவாதித்தார்.

புதன்கிழமை பிற்பகலில் தில்லி திரும்பினார் விக்ரம் சிங்.

எல்லை பிரச்சினையை சுமுகமாக தீர்க்க இந்திய சீனா அதிகாரிகளுடன் மூன்றாவது சுற்று பேச்சு வரும் வெள்ளியன்று நடைபெறும் என எதிர்பார்க்க படுகிறது.

Troops of  of China intruded 10-km inside the Indian territory

Property for sale in Chennai

Related posts