தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய நீர்மின் திட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை 25 April 2013

 தமிழக சட்டசபையில், நேற்று விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில் தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய நீர்மின் திட்டம் அமைய இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட 10 துணை மின் நிலையங்கள்,  230 கிலோவோல்ட் திறன் கொண்ட 16 துணை மின் நிலையங்கள், 110 கிலோ வோல்ட் திறன் கொண்ட 19 துணை மின் நிலையங்கள் மற்றும் 33 கிலோ வோல்ட் திறன் கொண்ட 11 துணை மின் நிலையங்கள் என மொத்தம் 56 துணை மின் நிலையங்கள் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
புதிய மின் உற்பத்தி நிலையங்களை இயக்கி வைத்தல், புதிய மின் திட்டங்களைத் தொடங்குதல் மட்டுமல்லாது, பற்றாக்குறையை 85 சதவீதம் வரை ஈடு செய்யும் வகையில், நீண்ட கால அடிப்படையிலான ஒப்பந்தப் புள்ளிகள், அதாவது கேஸ் ஓன் பிட்டிங் மூலம் மின் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில் முதல் கட்டமாக வருகின்ற அக்டோபர் மாதம் முதல் நீண்ட கால அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு 1000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்றார்.

Related posts