சீனாவில் 2 புத்தசாமியார்கள் – திபெத்தியர்கள் தீக்குளித்து சாவு

Two young Tibetan monks immolated themselves

பீஜிங் 25April2013

திபெத்தில் இருந்து சீன ராணுவம் வெளியேற கோரி திபெத்தியர்கள் கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக இதுவரை 110 பேர் தீக்குளித்து உள்ளனர். இதில் பலர் இறந்து விட்டனர்.

போராட்டத்தின் தொடர்ச்சியாக சீனாவின் சிச்சுவான் மாகாணம் கிர்தி மொனாஸ்திரி என்ற இடத்தில் இன்று 2 புத்தசாமியார்களும் ஒரு திபெத்திய பெண்ணும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

பிரான்சு நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹோலண்ட் மற்றும் ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கை குழு தலைவர் கேத்தரின் அஷ்டன் ஆகியோர் பீஜிங்கில் சுற்றுப்பயணம் செய்யும் சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

English Summary:

Two young Tibetan monks immolated themselves

Two young Tibetan monks of Taktsang Lhamo Kirti Monastery in Zoege, eastern Tibet, immolated themselves in Tibet on Wednesday.

Related posts