மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை:பழனிசாமியின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி அவரது மகன் ரோஹன்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பழனிசாமியின் மரணம் தொடர்பான அறிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

மனுதாரரின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற மறுத்துவிட்டனர்.மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையில் திருப்தி இல்லையென்றால் பழனிசாமியின் மகன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்தனர். பதப்படுத்தப்பட்டுள்ள பழனிசாமி உடலை பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts