போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது

no fuel for traffic violators. No helmet no petrol new rule in Gujarat

no fuel for traffic violators. No helmet no petrol new rule in Gujarat

அகமதாபாத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் ஒன்றை கையாள போக்குவரத்து காவல்துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் படி போக்குவரத்து காவல்துறையும், பெட்ரோல் பங்க் நிறுவனமும், இணைந்து போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுனர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என முடிவெடுத்து உள்ளார்கள். வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறை படுத்தபடவிருக்கும் இந்த விதிமுறைபடி, உரிமம் இல்லாத ஓட்டுனர்கள், இருக்கை பெல்ட்களோ, ஹெல்மெட்டோ அணியாதவர்கள் ஓட்டிவரும் வாகனங்கள், ஹெல்ப்லைன் எண்கள் எழுதப்படாத ஆட்டோக்கள், ஆடம்பரமான எண் பலகைகள் கொண்ட இரு சக்கர வாகனங்கள், கண்ணாடிகளில் அடர்த்தியான பிலிம் பேப்பர் ஒட்டப்பட்ட கார்கள் போன்றவற்றிற்கு எரிபொருள் அளிக்க வேண்டாமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர இந்த புதிய முறை உதவுமென எதிர்பார்க்கபடுவது குறிப்பிடத்தக்கது. 

no fuel for traffic violators. No helmet no petrol new rule in Gujarat

Related posts