Tractor driver killed in police inquiry at Thiruthuraipoondi in a Police station at Thiruvarur district of Tamil Nadu திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளம் வாலிபர், காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். அதனால் காவல் துறையினரை கண்டித்து, 3000க்கு அதிகமான, பொதுமக்கள் ஒன்று கூடி சாலைமறியல் செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கீரைக்கழூர் பஞ்சாயத்தில் இருக்கும் நங்காளி கிராமத்தை சேர்ந்த முருகையநின் மகன் சுந்தர், வயது 34. உழவு வாகன ஓட்டுனராக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4 மணிக்கு, ஆலிவலம் காவல்துறையினர் ஓர் வழக்கு விசாரணைக்காக, காவல் நிலையத்திற்கு சுந்தரை கூட்டிச் சென்றனர். அன்று இரவு சுந்தரை விசாரணையின் போது அடித்து, கொடூரமாக தாக்கி காவல்துறையினர் சித்ரவதை செய்ததாக…
Read More காவல்துறையினர் தாக்கியதில் வாலிபர் சாவு – மக்கள் மறியல் : போக்குவரத்து பாதிப்புதமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
Tamilnadu Government Transferred 8 IAS officers on Tuesday ahead of general elections, The orders were released to the media after chief minister J.Jayalalithaa left for the Kodanad estate at Nilgiris district. தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடைய பதவியை மாற்றி தலைமைச் செயலாளர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:– தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் இயக்குனராகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும் இருந்த கே.ராஜாராமன் வணிக வரித்துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புள்ளியயல் துறை கமிஷனராக இருக்கும் டாக்டர் இறையன்பு அண்ணா நிர்வாக கழகம் இயக்குனர் மற்றும் முதன்மை செயலாளர் பொறுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இயக்குனர் பொறுப்பை இதுவரை அனிதா பிரவீன் கூடுதல்…
Read More தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவுபா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் : யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ்
Yoga Master Guru Ramdev says that he will support Narendra modi and not his Bharatiya Janata Party பா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் : யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ் புதுடில்லி: இந்திய தலை நகர் டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ் உரையில்: பா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் செய்ய இருக்கிறேன். எனினும், நரேந்திர மோடிக்கு மட்டும் எனது ஆதரவு உண்டு, அவரது கட்சியான பாரதிய ஜனதாவிற்கு கிடையாது. 2014ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்க இருக்கிறது. என கூறினார். Yoga Master Guru Ramdev…
Read More பா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் : யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ்பீகார் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வை தாக்கி பேசிய முதலமைச்சர் நிதீஷ் குமாரை குறிவைத்து செருப்பு வீச்சு
Foot wear thrown on Bihar chief Minister Nitish kumar while speaking about congress and BJP in Public meeting at Bihar பீகார் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வை தாக்கி பேசிய முதலமைச்சர் நிதீஷ் குமாரை குறிவைத்து செருப்பு வீச்சு பெகுசராய் எனும் பகுதியில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவர், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் பா.ஜ.க வை கடுமையாக தாக்கி மற்றும் குற்றம் சாட்டி பேசினார். அப்பொழுது கூட்டத்திலிருந்து, முதலமைச்சர் நிதிஷ்குமாரை குறிவைத்து, செருப்பு ஒன்று வீசப்பட்டது. ஆனாலும், வீசப்பட்ட அந்த செருப்பு, நிதிஷ் குமார் மீது விழ வில்லை. இதனையடுத்து, செருப்பு வீசப்பட்ட இடத்தை நோக்கி காவல்துறையினர் விரைந்து சென்றன்ர். ஆனாலும் செருப்பு வீசிய நபர், அவர்களிடம் அகப்படாமல்…
Read More பீகார் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வை தாக்கி பேசிய முதலமைச்சர் நிதீஷ் குமாரை குறிவைத்து செருப்பு வீச்சுஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் போலி பிறப்பு சான்றிதழ்
Duplicate forgery Birth certificate of Arvind Kejriwal stating his birth place as Madurai ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் போலி பிறப்பு சான்றிதழ் மதுரையில் பிறந்ததாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போலியாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில் சில வழக்கறிஞர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து ஓர் மனுவை அளித்தார்கள். மாநகராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தார்கள். மேலும் மதுரையில் பிறந்ததாக டெல்லி முதல்வராக பொறுப்பு ஏற்க இருக்கும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் மாநகராட்சியினர் போலி பிறப்பு சான்றிதழ் வழங்கி இருப்பதாகவும்…
Read More ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் போலி பிறப்பு சான்றிதழ்மகாராஷ்டிராவில் 66 வயது பெண் தன் கணவரின் உயிரைக் காக்க மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் வெறும் காலில் கட்டிய சேலையுடன் ஓடி 5,000 ரூபாய் பரிசு பெற்றர்
Sixty six year old granny runs ‘marathon’ in a saree in Maharashtra இருதய கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின், ‘எம்.ஆர்.ஐ., ஸ்கேன்’ கட்டணத்திற்காக வெறும் காலில் கட்டிய சேலையுடன் மராத்தான் ஓட்டப் போட்டி ஒன்றில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்ற பாட்டியின் செயல் பலரையும் நெகிழ் வைத்துள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் நடந்த மராத்தான் ஓட்டப் போட்டியில், 66 வயது பாட்டியான லதா பகல்வான்காரே என்பவர் வெறும் காலில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்தையடுத்து அவரை சந்தித்து பேசிய மீடியாக்களிடம் சொன்ன செய்தியை கேட்டு பலரும் நெகிழ்ந்து விட்டார்கள் அதாவது இருதய கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின் ‘எம்.ஆர்.ஐ., ஸ்கேன்’ கட்டணத்திற்காகவே அந்த முதிய பெண்மணி முதல்…
Read More மகாராஷ்டிராவில் 66 வயது பெண் தன் கணவரின் உயிரைக் காக்க மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் வெறும் காலில் கட்டிய சேலையுடன் ஓடி 5,000 ரூபாய் பரிசு பெற்றர்நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை பல்கலைக் கழகங்கள் அளிக்க முயல வேண்டும் :- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
Indian Universities should increase the advancement of Technology and quality of education for the present scenario, said Indian President Pranab Mukherjee in a speech at Loyola collage today சென்னை: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வந்தார். அவர் லயோலா கல்லூரியில் உரையாற்றினார். அங்கு அவர் கூறியதாவது: ஓர் நாட்டின் வளர்ச்சி, அதனுடைய கல்வித் தரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் நிலைமை மாறிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், தரம் மிக்க கல்வி என்பது மிக முக்கியம். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை பல்கலைக் கழகங்கள் அளிக்க முயல வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். Indian Universities should increase the advancement of Technology and quality…
Read More நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை பல்கலைக் கழகங்கள் அளிக்க முயல வேண்டும் :- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிபெங்களூரில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது
Life-size Sachin Tendulkar cake in Bangalore grabs eyeballs சச்சினின் முழு உருவ கேக் , பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேக் உலகிலேயே இது வரை மிகப்பெரிய கேக் எனும் பெருமையை தட்டிச்செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான ராமச்சந்திரன் என்பவர்தான் சச்சினின் முழு உருவ கேக்கினை செய்தவர்.ஒரு கையில் பேட்டையும் மற்றொரு கையில் ஹெல்மெட்டையும் பிடித்தவாறு சச்சின் நிற்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட கேக்கை காண பலர் வருகைபுரிந்துள்ளனர்.கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் கேக் கண்காட்சிக்காக இது அமைக்கப்பட்டுள்ளது. சச்சினின் முழு உருவ கேக்கை செய்ய 5 நாட்களானது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Life-size Sachin Tendulkar cake in Bangalore grabs eyeballs
Read More பெங்களூரில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ கேக் வடிவமைக்கப்பட்டுள்ளதுதென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்களது தேன்நிலவுக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் நசுங்கி பலி
South African Indian Origin newly wedded couple killed in road accident enroute to honeymoon தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்களது தேன்நிலவுக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் நசுங்கி பலியாகினர். தென்னாப்ரிக்காவில் கடந்த ஞாயிறன்று ஆஷ்லே ரெட்டி (வயது 30) இவர் மருத்துவ தொழில்நுட்ப நிபுணர் – தீபிகா (வயது 29) ஆகிய தம்பதிகள் இந்து முறைப்படி உறவினர்கள் படை சூழ, வாழ்த்தொலி முழங்க திருமணம் செய்து கொண்டார்கள். திங்களன்று திருமணம் முடிந்து தங்களது தேனிலவைக் கொண்டாடுவதற்கு வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி இருவரும் தலை நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார்கள். இந்த கோர விபத்தில் மற்றும் ஓர் இளைஞர் உடல் நசுங்கி பலியானார். ஞாயிறு கிழமையன்று மிக்க மகிழ்ச்சியோடும், வாழ்த்துக்களோடும்…
Read More தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்களது தேன்நிலவுக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் நசுங்கி பலிதூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
Madras High Court of Madurai Branch today denied bail to 35 crew member தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் 12ம் தேதி தூத்துக்குடி பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் நவீன ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் கப்பலில் வந்த 35 நபர்கள் பேர் கைது செய்யப்பட்டனர். அந்த அமெரிக்க கப்பல் மாலுமிகள் சென்னை புழல் மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சார்பாக ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. English Summary : The Madras…
Read More தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

