உலகில் பிறக்கும் 2 லட்சம் குழந்தைகளில் ஒன்று என்ற விகிதத்தில்தான் உடற்பாகங்கள் ஒட்டிய நிலையில் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆண்களில் இத்தகைய இரட்டையர்கள் காணப்படுவது மிகவும் அரிது. இதுவரை உலக அளவில் இடுப்புக்குக் கீழ் ஒட்டிப் பிறந்த நிலையில் 30 ஜோடி குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இந்நிலையில் இப்படி ஒட்டிப் பிறந்த 9 மாதமே ஆன ஆண் குழந்தைகள் 16 மணி நேரம் நடந்த ஆபரேஷன் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. மேலும் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதாக சம்பந்தப்பட்ட சென்னை டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த வகை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. தான்ஸானியா நாட்டை சேர்ந்த 9 மாதமே ஆன எரிகா மற்றும் எல்யூடி என்ற இடுப்புக்கு கீழே ஒட்டிப் பிறந்த ஆண் குழந்தைகள் சிகிச்சைக்காக கடந்த ஜூன் மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.…
Read More ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை சென்னை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனைபாகிஸ்தாநில் 13வயது சிறுவனுக்கு 50 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
13-Year-Old Pakistani boy Gets 50 Years in Jail for Murder பாகிஸ்தானில் தனது தந்தையை கொல்ல முயன்ற நபரை நீதிமன்ற வளாகத்திலேயே சுட்டு கொன்ற 13 வயது சிறுவனுக்கு 50 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாகூரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குர்ஜன்வாலா பகுதியை சேர்ந்த ஒரு நபரை ஹபிஸ் கியாஸ் என்பவர் கொல்ல முயற்சித்தார். ஹபிஸ் தாக்கியதில் அந்த நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இந்நிலையில், ஹபிஸ் கொலை செய்ய முயற்சித்ததற்காக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் ஹபிஸ் தாக்கிய நபரின் 13 வயது மகன் கையில் துப்பாக்கியுடன் அங்கு வந்து, ஹபிசை சுட்டு கொன்றார்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு விசாரணை குர்ஜன்வாலா மாவட்டத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு…
Read More பாகிஸ்தாநில் 13வயது சிறுவனுக்கு 50 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுஅறுவை சிகிச்சை இல்லாமல் சூப்பர் பேஸ்மேக்கர்
World’s smallest pacemaker implanted without surgery இதய நோயான மாரடைப்பு ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இதய ஓட்டத்தை நிறுத்தா வண்ணம் பேஸ்மேக்கர் என்னும் ஒரு சாதனம் பொருத்த படுவது சகஜமான ஒன்றூ. இதன் மூலம் சிறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இதயம் சற்று நின்று போனாலும் ஒரு உசுப்பு உசுப்பி வேலை செய்ய வைக்கும் ஒரு அற்புத சாதனம். இநிலையில் இப்போது ஆஸ்த்ரியா நாட்டின் மெடிட்ரானிக் என்னும் நிறுவனம் உலகத்திலே அதி சிறிய பேஸ் மேக்கரை உருவாக்கி உள்ளார்கள். அதாவது இது பழைய பேஸ்மேக்கரை விட பத்து மடங்கு சிறிது நீளம் வெறும் 24 மில்லி மீட்ட்ர் – அகலம் 0.75 கியூபிக் சென்டி மீட்டர் மட்டுமே கொண்டது இதில் இன்னொரு மகிழ்ச்சி விஷயம் இதை இம்ப்ளான்ட்…
Read More அறுவை சிகிச்சை இல்லாமல் சூப்பர் பேஸ்மேக்கர்மருத்துவ கழிவு பொருட்களால் வரக்கூடிய பல்வேறு ஆபத்துக்கள்…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக அஞ்சன் குமார்தாஸ் என்பவர் மீது அண்மையில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பின்னர், மருத்துவக்கழிவுகள் வெளியேற்றப்படும். பயன்படுத்தப்பட்ட ஊசிகள், செயற்கை சுவாசக் குழாய்கள், சிரிஞ்சுகள், கத்தி, ரத்தக்குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை மருத்துவக்கழிவுகள் ஆகும் . சில நோய்களுக்கு உடல் உறுப்புகளையே அகற்ற வேண்டியுள்ளது. உதாரணமாக சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு, பாதிப்பின் நிலையைப் பொருத்து விரல்கள் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. அதுபோல் மருத்துவ ஆய்வுக் கூடங்களிலிருந்து நுண்ணுயிர்க் கிருமிகள் கலந்த கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவையும் கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் கழிவுப்…
Read More மருத்துவ கழிவு பொருட்களால் வரக்கூடிய பல்வேறு ஆபத்துக்கள்…நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்து
Fire accident at Mumbai multistorey building மும்பை : நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 9 நபர்கள் கருகி பலியாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. மும்பை நகரில் உள்ள கென்ஸ் கார்னரில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்து, அருகாமையில் இருக்கும் வீடுகளுக்கும் பரவி, அங்கு எரிந்துகொண்டிருந்த வீடுகளில் இருக்கும் சமையல் வாயு சிலிண்டர்கள் வெடித்ததால் தீயை கட்டுக்குள் கொண்டுவர 5 மணிநேரம் ஆனதாகவும், தீயை அணைக்க 7 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் போராடியதில் 4 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது. வீடுகளில் பற்றிய தீயினால் 6 பேர் அந்த சம்பவ…
Read More நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்துபாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு :திரு.சவுரவ் கங்குலி நிராகரிப்பு
புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் திரு.சவுரவ் கங்குலிக்கு பாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு தருவதாகவும், தேர்தலில் வெற்றியடைந்து பா.ஜ.க ஆட்சி அமைத்தால் திரு.சவுரவ் கங்குலிக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் பா.ஜ.க அழைப்பு விடுத்திருந்தது. எனினும், தான் தேர்தலில் பங்கேற்க விரும்பவில்லை என்றும் பா.ஜ.க வின் அழைப்பை நிராகரிப்பதாகவும் திரு.சவுரவ் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Read More பாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு :திரு.சவுரவ் கங்குலி நிராகரிப்புஇந்தியாவில் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை திறந்த வெளியில் எரிக்க தடை
National Green Tribunal bans burning of plastic, rubber across the country இந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முறைப்படுத்தப்படாத முறையில் திறந்தவெளியில் ரப்பர்பொருட்களின் கழிவுகளை எரிக்க நேற்று தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் பிற பொருட்கள் திறந்தவெளியில் எரிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த தடை முறைப்படுத்தப்படாத பிளாஸ்டிக் கழிவுகளின் கையாளுதலும், அகற்றுதலும் தடை செய்து மறு சீரமைப்பு சூழலில் இயற்கையின் பாதுகாப்பிற்குத்தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவும் வழி வகுப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு விதிகளுக்கு உட்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள், பழைய பொருட்கள் விற்பனையாளர்கள், மறுசுழற்சியாளர்கள் மற்றும் பி.வி.சி / பாலிஸ்டர்/ பிளாஸ்டிக் கழிவுகள் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள் செயலாற்ற வேண்டும் என என்.ஜி.டி தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் கூறியுள்ளார்.…
Read More இந்தியாவில் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை திறந்த வெளியில் எரிக்க தடைபெண்களுக்கான உலக கோப்பை கபடி போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக இந்திய அணி வெற்றி
India won Womens Kabaddi World Cup 2013 உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி ஜலந்தரில் நேற்று நடந்தது.இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 49-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3வது முறையாக உலககோப்பையை இந்திய பெண்கள் அணி தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு ரூ.51 லட்சம் பரிசு கிடைத்தது. அத்துடன் போட்டியில் சிறந்த ஸ்டாப்பராக இந்தியாவின் அனுராணியும், சிறந்த ரைடராக ராம்பத்தேரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாருதி ஆல்டோ…
Read More பெண்களுக்கான உலக கோப்பை கபடி போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக இந்திய அணி வெற்றிஅமெரிக்காவிற்கான இந்திய துணைத் தூதரை கைவிலங்கிட்டு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்
Deputy Consul general of india in New York Devyani Khobragade handcuffed in public அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதராக பணியில் இருப்பவர் திருமதி.தேவயானி கோப்ரகடே. தனது அலுவலகத்தில் வேலை செய்த நபருக்கு அவர் விசா வழங்க அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில் முறைகேடான ஆவணங்களையும், தவறான தகவல்களையும் அளித்துள்ளதாக, மென்ஹட்டன் பகுதியின் பெடரல் வழக்கறிஞர் ப்ரீத் பஹாரா குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டையடுத்து, துணை தூதர் தேவயானி தனது மகளை பள்ளியில் அழத்து வந்து விட்டுச்செல்ல காரில் சென்ற போது பொதுமக்கள் முன் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுதலை செய்தார்கள். அமெரிக்க அரசினுடைய இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் இந்தியாவுக்கான…
Read More அமெரிக்காவிற்கான இந்திய துணைத் தூதரை கைவிலங்கிட்டு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்சீனாவில் மனவளர்ச்சி குன்றிய மகனை 40 ஆண்டுகளக கூண்டில் அடைத்து வைத்து வளர்த்த தாய்
Chinese boy kept in cage for 40 years மனவளர்ச்சி குன்றிய தனது 48 வயது மகனை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கூண்டில் அடைத்து வளர்த்து வந்துள்ளார் சீனத் தாய் ஒருவர். தற்போது தனது மரணத்திற்குப் பின் தனது மகனுக்கு தகுந்த பாதுகாப்புத் தேவை என கருதி மற்றவர்கள் உதவியை எதிர்பார்த்ததன் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐந்தறிவு படைத்த விலங்குகளையே கூண்டில் அடைத்து வளர்ப்பது தவறு என மிருகவதைத் தடுப்பு ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், தனது 48 வயது மகணை கூண்டில் அடைத்து தாயே வளர்த்து வந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. சீனாவின், மத்திய ஹெனான் பகுதியில் உள்ள ஷென்சோ பகுதியைச் சேர்ந்தவர் பென்ங் வீகிங் என்ற 48 வயது மனிதர். மனவளர்ச்சி குன்றிய இவர் தனது வாழ்க்கையின்…
Read More சீனாவில் மனவளர்ச்சி குன்றிய மகனை 40 ஆண்டுகளக கூண்டில் அடைத்து வைத்து வளர்த்த தாய்

