அமெரிக்காவிற்கான இந்திய துணைத் தூதரை கைவிலங்கிட்டு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்

Deputy Consul general of india in New York Devyani Khobragade handcuffed in public 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதராக பணியில் இருப்பவர் திருமதி.தேவயானி கோப்ரகடே. தனது அலுவலகத்தில் வேலை செய்த நபருக்கு அவர் விசா வழங்க அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில் முறைகேடான ஆவணங்களையும், தவறான தகவல்களையும் அளித்துள்ளதாக, மென்ஹட்டன் பகுதியின் பெடரல் வழக்கறிஞர் ப்ரீத் பஹாரா குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டையடுத்து, துணை தூதர் தேவயானி தனது மகளை பள்ளியில் அழத்து வந்து விட்டுச்செல்ல காரில் சென்ற போது பொதுமக்கள் முன் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுதலை செய்தார்கள்.

Deputy Consul general of india in New York Devyani Khobragade handcuffed in public

அமெரிக்க அரசினுடைய இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

“அமெரிக்காவினுடைய இந்த நடவடிக்கையால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்திருக்கிறோம். எங்கள் தூதரை கைது செய்ததை ஏற்றுக்கொள்ளவே இயலாது” என வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Deputy Consul general of india in New York Devyani Khobragade handcuffed in public

New Delhi:  India has summoned US Ambassador Nancy Powell to lodge a strong protest against what it has called the “unacceptable treatment” of its high-ranking diplomat Devyani Khobragade, who was arrested and handcuffed in public in New York on Thursday for an alleged visa fraud.

Related posts