நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்து

Fire accident at Mumbai multistorey building

Fire accident at Mumbai multistorey building

மும்பை : நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 9 நபர்கள் கருகி பலியாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

மும்பை நகரில் உள்ள கென்ஸ் கார்னரில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்து, அருகாமையில் இருக்கும் வீடுகளுக்கும் பரவி, அங்கு எரிந்துகொண்டிருந்த வீடுகளில் இருக்கும் சமையல் வாயு சிலிண்டர்கள் வெடித்ததால் தீயை கட்டுக்குள் கொண்டுவர 5 மணிநேரம் ஆனதாகவும், தீயை அணைக்க 7 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் போராடியதில் 4 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது.

வீடுகளில் பற்றிய தீயினால் 6 பேர் அந்த சம்பவ இடத்தில் உடல் கருகி இறந்தனர் எனவும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூன்று பேர் பலியாகினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலியானோர் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது என அஞ்சப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்பினுடைய 12வது மாடியை ஒருவர் வாங்கி வீட்டை இன்டீரியர் மாற்றி அமைக்கும் போது, மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிய வருகிறது.

Fire accident at Mumbai multistorey building

Related posts