பெங்களூரில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது

Life-size Sachin Tendulkar cake in Bangalore grabs eyeballs

Life-size Sachin Tendulkar cake in Bangalore grabs eyeballs

சச்சினின் முழு உருவ கேக் , பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேக் உலகிலேயே இது வரை மிகப்பெரிய  கேக் எனும் பெருமையை  தட்டிச்செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அண்மையில் ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான ராமச்சந்திரன் என்பவர்தான் சச்சினின் முழு உருவ கேக்கினை செய்தவர்.ஒரு கையில் பேட்டையும் மற்றொரு கையில் ஹெல்மெட்டையும் பிடித்தவாறு சச்சின் நிற்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட கேக்கை காண பலர் வருகைபுரிந்துள்ளனர்.கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் கேக் கண்காட்சிக்காக இது அமைக்கப்பட்டுள்ளது. சச்சினின் முழு உருவ கேக்கை செய்ய 5 நாட்களானது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Life-size Sachin Tendulkar cake in Bangalore grabs eyeballs

Related posts