ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ஜம்போ ஏஐ 964 என்ற விமானம், நேற்று காலை சவூதி அரேபியா ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 400 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தின் விமானி அறையின் ஒரு கதவு சரியாக மூடப்படாதது குறித்து விமானி அறையின் கருவி எச்சரித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் ஜெட்டா நகர விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனர். ஜெட்டா விமான நிலைய என்ஜினியர்கள் கதவு சரி செய்தனர். இதையடுத்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பிறகு அந்த விமானம் புறப்பட்டது. இதனால் விமானம் ஐதராபாத்திற்கு செல்லாமல் நேராக மும்பைக்கு பத்திரமாக வந்து இறங்கியது. பின்னர் ஐதராபாத் பயணிகள் மற்றொரு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்…
Read More நடுவானில் திறந்த விமான கதவுகள் பயணிகள் உயிர் தப்பினர்Category: உலகம் சிறகுகள்
உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கும் பிரேஸ்லெட்
A Thermoelectric Bracelet To Maintain a Comfortable Body Temperature இந்த நவீன பிரேஸ்லெட்டை அணிந்துகொண்டால் நம் உடம்பே குளிர்ச்சியாக வைத்திருக்கும் வெப்ப மின்னோட்ட டெக்னாலஜியை அமெரிக்காவின் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.இது வரை வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்றும் மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர் அதே சமயம் ஊட்டி, கொடைக்கானல் குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது. ரிஸ்டிஃபை கருவியை அணிந்துகொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம். இங்கு படிக்கும் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர்.தற்போது கருவிக்கு முறைப்படி காப்புரிமை பெற்று…
Read More உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கும் பிரேஸ்லெட்நெஞ்சுவலி என்றாலே மாரடைப்பா ??. தவறான கணிப்பு
Heart disease health centre நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்பு தான் என்று நினைக்கும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும். அதை விடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.உடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான நெஞ்சு வலி இருக்கும். ஆனால், நோய் தீவரம் அதிகம் இருக்க கூடும்.இந்த நிலையில் மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்று கண்டுபிடித்து சொல்லக்கூடிய…
Read More நெஞ்சுவலி என்றாலே மாரடைப்பா ??. தவறான கணிப்புபேஸ்புக்கில் இணையதள பெண்கள் பாதுகாப்பு கமிட்டி
Women Protection committe has been formed to save FB women from misusing their profile images இப்பவும் தமிழகத்தில் சங்க காலம் தான் நடக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் எல்லாவற்றிற்கும் சங்கம் வந்து விட்டது. அந்தவகையில் லேட்டஸ்டாக உருப்படியான ஒரு அமைப்பு உருவாகியுள்ளது. அதுதான் இணையதள பெண்கள் பாதுகாப்புக் குழு. பேஸ்புக் பக்கங்களில் பெண்களின் புரபைல் படங்களையும் அவர்கள் போடும் படங்களையும் தவறாக பயன்படுத்துவோரைத் தட்டிக் கேட்கும் குழுவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் படங்களை வக்கிரமாக பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் உஷாராக இருக்குமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தக் குழுவை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த பேஸ்புக் பக்கத்தில் போடப்பட்டுள்ள பகிர்வு… உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோ இணையம் முழுவதும் பரவி இருக்கலாம். இந்த ஃபோட்டோவில் இருக்கும் பெண், ஒரு…
Read More பேஸ்புக்கில் இணையதள பெண்கள் பாதுகாப்பு கமிட்டிதுபாய் உடல் எடையை குறைவாக்கும் போட்டி: முதல் பரிசு வென்ற சிரிய நாட்டவருக்கு 63 கிராம் தங்க பரிசு
Weight reducing contest organized by DUBAI municipality : Ahmad al-Sheikh a 27 year old Syrian architect got the first prize worth of 10048 dirhams – 63 grams of gold by losing 26 kilograms . அரபு நாடான துபாயில் உடல் எடையை வேகமாக குறைத்து காட்டியவர்களுக்கு தங்க பரிசு கொடுக்கப்பட்டது. இந்த உடல் எடை குறைப்பு போட்டியில் முதல் பரிசை தட்டி சென்ற சிரிய நாட்டை சேர்ந்தவருக்கு 63 கிராம் தங்கம் பரிசாக கொடுக்கப்பட்டது. மக்களிடையே குண்டான தன்மைக்கு எதிரான விழிப்புணர்ச்சி ஏற்படுத்த உடல் எடையை குறைத்து காட்டும் போட்டி ஒன்றை துபாய் நகர சபை ஏற்பாடு செய்து நடத்தியது. அந்த போட்டியில் ஜெயிப்பவ்ரகளுக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதை…
Read More துபாய் உடல் எடையை குறைவாக்கும் போட்டி: முதல் பரிசு வென்ற சிரிய நாட்டவருக்கு 63 கிராம் தங்க பரிசுகண்களில் நீர் வரவழைக்காத வெங்காயத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை
American agricultural Scientists have developed a new type of onions which will not make the eyes to produce tears கண்ணில் நீர் வர வைக்காத நவீன புதிய ரக வெங்காயத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் இந்த நவீன புதிய ரக வெங்காயத்தை உரிக்கும் பொழுது ஒரு சொட்டு நீர் கூட கண்களிலிருந்து வரது என கூறபடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது கண்ணீர் வருவதற்கு காரணம், அதில் உள்ள அதீதமான புரோட்டீன் சத்து தான். எனினும் புதிய ரக நவீன வெங்காயத்தில் இந்த புரோட்டீன் சத்து அளவு மிக குறைவான அளவில் இருக்கும், ஆகவே கண்ணீர் வராது என கூறபடுகிறது. இந்த கண்ணீரில்லா வெங்காயத்தை பயன்படுத்தினால், இதயநோய்களும் குணமாகும் என பேசப்படுகிறது. எடை குறைந்து இந்த வெங்காயம் குறித்து…
Read More கண்களில் நீர் வரவழைக்காத வெங்காயத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனைபிரிட்டிஷ் விமான நிறுவனம் பிரெஞ்சு இளைஞர் பயணிக்க அனுமதி மறுப்பு
Heavy fat French youth stopped in Chicago airport by British airways officials saying that he is too heavy to travel in aircraft ஒன்றரை வருடத்திற்கு முன் பிரான்ஸ் நாட்டிலிருந்து கெவின் செனைஸ் என்ற இளைஞன் தனது பெற்றோர்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா வந்தார்கள். 20 வயதுடைய கெவினுக்கு உடலில் உண்டான ஹார்மோன் பிரச்சினை காரணமாக உடல் கனமாகி சுமார் 500 பவுண்டு எடையோடு இருந்தார். இந்த காரணத்திற்காக மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா வந்த கெவின் மேயோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அந்த சிகிச்சை முடிவுக்கு வந்த பின் அவர்கள் தங்கள் நாடான பிரான்சிற்கு திரும்பிச் செல்ல மீண்டும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்தார்கள். எனினும் விமான நிலையத்திற்கு பயணத்தேதியன்று வந்த…
Read More பிரிட்டிஷ் விமான நிறுவனம் பிரெஞ்சு இளைஞர் பயணிக்க அனுமதி மறுப்பு2015-ல் பாப் பாடகி லேடி க்ஹக வின் விண்வெளி இசை நிகழ்ச்சி திட்டம்
Lady Gaga plans real time live pop music in 2015 at space அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கவர்ச்சிப்பாப் பாடகியான லேடி க்ஹக. ‘லேடி க்ஹக’ பல நாடுகளில் பாப் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் உலக வரலாற்றில் முதன் முறையாக ‘லேடி க்ஹக’ விண்வெளியில் இசையமைத்து பாடல் பாடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு வருகிறார். மைகேல் ஜாக்சனுக்கு பின் உலக பாப் நிகழ்சிகளில் ‘லேடி க்ஹக’ மேடையேறினால் ஒட்டு மொத்த கூட்டத்தையும் எழுந்து துள்ளல் ஆட்டம் போட வைக்கும் அளவிற்கு ரம்மியமாக ஆடிக்கொண்டே பாடும் வசீகர பாடகி. Lady Gaga plans real time live pop music in 2015 at space ‘லேடி க்ஹக’ வின் பாப் பாடல் ஆல்பங்கள் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும்…
Read More 2015-ல் பாப் பாடகி லேடி க்ஹக வின் விண்வெளி இசை நிகழ்ச்சி திட்டம்பரம ஏழையாக குடிசையில் வாழ்ந்து வரும் மியான்மர் நாட்டின் இளவரசி
Burma Myanmar former royals lead a ordinary and poor life மியான்மர் நாட்டினுடைய அரச வம்சத்தைச்சேர்ந்த கடைசி இளவரசி ஏழையாக குடிசையில் வறுமையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நாட்டின் கிழக்கில் உள்ள அண்டை நாடான மியான்மரில் (முன்பு பர்மா என்று அழைக்கப்பட்டது) காலம்காலமாக மன்னர் ஆட்சி நடந்து வந்தது. மியன்மரின் கடைசி மன்னராக இருந்தவர் “திபா”. கடந்த 1885–ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்த போது, இவருடைய ஆட்சியையும் அதிகாரமும் பறிக்கப்பட்டது. மியன்மர் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பின் ராணுவம் ஆட்சியை கைபற்றியது. இதனையடுத்து அரச பரம்பரை முற்றிலும் தடைசெய்யப்பட்டு அவர்களது குடும்பத்தினர் நடுத்தெருவுக்கு வந்து சாதாரண குடி மக்களாக்கப்பட்டனர். அப்படி வந்த கடைசி இளவரசி “ஹிடெக் சு பாயா ஜி”. இவர் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார். தற்போது…
Read More பரம ஏழையாக குடிசையில் வாழ்ந்து வரும் மியான்மர் நாட்டின் இளவரசிபிலிப்பைன்ஸ் ஹையான் சூறாவளி புயல் : பல லட்சம் மக்கள் வெளியேற்றம்
strongest storm hits Philippines : Typhoon Haiyan ever to make landfall பிலிப்பைன்ஸில் சமர் தீவு இருக்கிறது. இது பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தென் கிழக்கே 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது . சமர் தீவை ‘ஹையான்’ எனும் புயல் நெருங்கி வந்து தாக்கும் என நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில் ஹையான் சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ் நேரப்படி இன்று அதிகாலை 4.40 மணியளவில் (இந்திய நேரம் நேற்று இரவு 8.40-க்கு) கடுமையாக தாக்கியது. இதனால் மணிக்கு சுமார் 185 கிலோ மீட்டர் கடுமையான வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. புயலால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை துண்டிக்கப்பட்டது. மேலும் தொலைபேசி மற்றும் செல்போன்கள் இயங்கவில்லை. சமர் தீவில்…
Read More பிலிப்பைன்ஸ் ஹையான் சூறாவளி புயல் : பல லட்சம் மக்கள் வெளியேற்றம்