பேஸ்புக்கில் இணையதள பெண்கள் பாதுகாப்பு கமிட்டி

Women Protection committe has been formed to save FB women from misusing their profile images

இப்பவும் தமிழகத்தில் சங்க காலம் தான் நடக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் எல்லாவற்றிற்கும் சங்கம் வந்து விட்டது. அந்தவகையில் லேட்டஸ்டாக உருப்படியான ஒரு அமைப்பு உருவாகியுள்ளது. அதுதான் இணையதள பெண்கள் பாதுகாப்புக் குழு.  பேஸ்புக் பக்கங்களில் பெண்களின் புரபைல் படங்களையும் அவர்கள் போடும் படங்களையும் தவறாக பயன்படுத்துவோரைத் தட்டிக் கேட்கும் குழுவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் படங்களை வக்கிரமாக பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் உஷாராக இருக்குமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தக் குழுவை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அந்த பேஸ்புக் பக்கத்தில் போடப்பட்டுள்ள பகிர்வு…

Women Protection committe has been formed to save FB women from misusing their profile images
உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோ இணையம் முழுவதும் பரவி இருக்கலாம். இந்த ஃபோட்டோவில் இருக்கும் பெண், ஒரு கல்லூரி மாணவி ஆவார். ஃபேஸ்புக்கில் ப்ரொஃபைல் ஃபோட்டோவாக இவரது புகைப்படத்தை போட, அதை டவுன்லோடு செய்து, செக்ஸ் சாட், மற்றும் இதர மட்டமான பக்கங்களில் பகிரப்பட்டது.
Women Protection committe has been formed to save FB women from misusing their profile images

ஆபாச கமென்ட்டுகளுடன் பல மாதங்கள் அந்த ஃபோட்டோ ஃபேஸ்புக்கின் பல வக்கிர பக்கங்களில் இருந்தது. ஜாக்கிரதை!!! உங்கள் ஃபோட்டோ கூட இப்படி பகிரப் பட்டிருக்கலாம்.
Women Protection committe has been formed to save FB women from misusing their profile images

உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோக்கள் ஒவ்வொன்றாக கூகிள் சர்ச்சில் போட்டு, அதன் அருகில் உள்ள கேமரா பட்டனை அழுத்தவும். உங்கள் ஃபோட்டோ வேறு பக்கங்களில் இருந்தால், அந்த சைட்களின் லிங்க் அதில் இருக்கும். அப்படி உங்கள் படம் பல்வேறு சைட்களில் வந்திருந்தால், விரக்தி அடைய வேண்டாம்.
Women Protection committe has been formed to save FB women from misusing their profile images
ஃபேஸ்புக்கில் ஐந்து பெண்களில் ஒருவரின் ஃபோட்டோ இந்த மாதிரி திருடப்படுகிறது. அந்த சைட்களுக்கு போக வேண்டாம். உடனே (அன்றே) எங்கள் பேஜில் ஒரு மெசேஜ் போடுங்கள். (போஸ்ட்டாக போட வேண்டாம். மெசேஜ் செய்யுங்கள்).
Women Protection committe has been formed to save FB women from misusing their profile images
பின்னர் உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோ லாக் செய்யுங்கள்.. சில வக்கிர புத்தி படைத்த உங்கள் ஃப்ரென்ட் லிஸ்டில் இருக்கும் சிலர் அதை கூகுளில் போட்டு, ஆபாச சைட்களுக்கு போய்ப் பார்த்து மகிழலாம்.
Women Protection committe has been formed to save FB women from misusing their profile images
லிங்க் ஐ மெசேஜ் இன்பாக்ஸ் க்கு அனுப்பி வையுங்கள். முடிந்தவரை நாங்களும் உங்கள் படத்தை நீக்க முயற்சி செய்கிறோம். இதற்கு பிரதி பலனாக நாங்கள் எதிர்பார்ப்பது ஒரு சுத்தமான பாதுகாப்பான இணையம், நாளை நாம், தோழிகள், நம் தாய், சகோதரி, மகள்கள் பயன்படுத்துவதற்கு. இந்த போஸ்ட்டை தயவு செய்து பகிரவும். இதில் எந்த மாற்றமும் செய்யாதீர்கள். உண்மையிலேயே நல்ல விஷயம்தான்!

Women Protection committe has been formed to save FB women from misusing their profile images

Related posts