Punjab inmates assault prisoner upload video on Facebook
பஞ்சாப் மாநிலத்தில் சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி தனது சக குற்றவாளியை அடித்து உதைப்பதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் கபூர்தலா சிறையில் உள்ள குற்றவாளிகள் தங்களது மொபைலில் பேஸ்புக் போன்று உள்ள பல சமூக வலைதளங்களை உபயோக படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சிறையில் உள்ள ஒரு குற்றவாளி தனது சக குற்றவாளி ஒருவரை அடித்து உதைத்து,அதை வீடியோ படம் எடுத்து தனது பேஸ்புக் அக்கௌண்டில் பதிவேற்றம் செய்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஓர் கொலை வழக்கு உட்பட 31 குற்றவியல் வழக்குகளில் குற்றம் நிருபிக்கப்பட்டு கபூர்தலா சிறையில் அடைக்கபட்டிருக்கும் சுக்கா கஹ்லோ என்ற குற்றவாளி அவருடைய மொபைலில் தனது சக கைதியை அடிப்பதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் அப்லோட் செய்துள்ளார்.
சிறையிலிருந்துகொண்டே இந்த குற்றவாளி செய்யும் இத்தகைய செயல்களை கண்டிக்க அங்குள்ளவர்கள் அஞ்சுவதாக கூறபடுகிறது.
தனது பேஸ்புக் பக்கத்தை தினமும் சிறையிலேயே மாற்றியமைக்கும் இவருடைய பக்கத்திற்கு இதுவரை சுமார்16,000 லைக்குகள் வந்திருக்கின்றன. சிறைக்கு வரும் அமைச்சர்கள் மற்றும் சிறை கட்டிடங்களின் புகைப்படங்களை இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
கபூர்தலா சிறையில் இருக்கும் சுக்கா கஹ்லோ இங்கு அடைக்கப்படுவதற்கு முன் ஆஸ்திரேலியா நாட்டில் தங்கியிருந்தார் மற்றும் இவர் பாஜக பிரமுகர் ஒருவது கொலை வழக்கில் முக்கியமான குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Punjab inmates assault prisoner upload video on Facebook
The Modern Jail in Kapurthala at punjab has landed in a controversy after an inmate was mercilessly assaulted by another inmate who then uploaded the gruesome act on his Facebook page using his personal smartphone.