4 Indians were dead of suffocation in Qatar while cleaning in a sewage manhole
4 Indians killed in manhole accident in Qatar
கத்தாரில் பாதாள சாக்கடை சுத்தம் செய்த போது 4 இந்தியர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக செத்தனர். அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தனர். இறங்கி சுத்தம் செய்த போது, திடீரென்று அவர்களுக்கு மூச்சுத் திணறல் உண்டானது. இந்த மூச்சு திணறலில் 4 இந்திய தொழிலாளர்கள் பரிதாபமாக செத்தனர்.
பலியான 4 இந்தியர்களின் விபரம்:
பலியானவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்:
1. இசாக் (வயது26),
2. பாசில் (வயது 30),
3. முனீர் ( வயது 20)
4. முகம்மது
இறந்தவர்கள் அரபு நாட்டில் தனியார் நிறுவனத்திடம் காண்டிராக்ட் அடிப்படையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.