சென்னையில் உள்ள 180 ஆண்டுகள் பழமையான அரசு அச்சகத்தில் தீ விபத்து

Fire breaks out at government press in Chennai

Fire breaks out at government press in Chennai

சென்னையில் உள்ள தங்க சாலையில் அமைந்திருக்கும் அரசு மைய அச்சகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் முக்கியமான பல ஆவணங்கள் எரிந்து சாம்பல் ஆகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சென்னையில் இருக்கும் தங்க சாலையில் அமைந்துள்ள அரசு மைய அச்சகம் சுமார் 180 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. சுமார் 10 ஏக்கர் நில பரப்பளவில் இயங்கிக்கொண்டு வரும், இந்த பழமையான அச்சகம் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறுவப்பட்டது.

தமிழக அரசாங்கத்திற்கு உண்டான அனைத்து ஆவணங்களும் இந்த அச்சகத்தில் தான் அச்சடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த அரசு மத்திய அச்சகத்தில் பயங்கர தீ பற்றி பரவி விபத்துக்கு உள்ளானது. இது பற்றி அதிகாலை சுமார் 2.25 மணியளவில் தகவல் வந்ததாகவும், உடனே தீ விபத்து நடந்த இடத்திற்கு இராயபுரம், எஸ்பிளனேடு, வேப்பேரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 9 தீயணைப்பு தண்ணீர் வண்டிகளில் சுமார் 20க்கும் merpatta தீயணைப்பு வீரர்கள் விரைவாக சென்று அந்த தீயை அணைக்கும் முற்பட்டதாகவும், சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் போராடிய பின்னர் தான் அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைக்க முடிந்தது என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.

Fire breaks out at Central government press in Chennai

A fire broke out at the store house of the British era Government Central Press on Mint Street in Seven Wells in north Chennai on Friday.   The police suspect an electrical short circuit might have caused the fire.   Around 2 am on Wednesday, employees saw smoke coming from the storehouse and alerted the firemen. Fire fighters with tenders from New Washermenpet, Esplanade, Vepery, Royalist, Tondiarpet and six water tankers from Chennai Metrowater were pressed into service.   The fire spread quickly in the storehouse and due to the heat, the dilapidated building caved in. This is second incident in less than three months. Papers were gutted in a similar fire accident in June.   Originally, the press was constructed in 1807 for minting coins and it was converted into the central printing press of the government of Tamil Nadu. Committee reports, government orders, budgetary notes and announcements and election forms are printed here.

Related posts