பெண்ணின் முடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்த உ.பி காவல்துறை

Up police Dragged Sisters by Hair, Thrashed and beaten Them in Public

Up police Dragged Sisters by Hair, Thrashed and beaten Them in Public

கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் குஷிநகரில் நில பிரச்சினை காரணமாக கைது நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் பெண்கள் என்று பார்க்காமல் சகோதரிகளை தலைமுடியைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து அடித்து உதைத்தது பெரும் அதிர்ச்சியையும் பதபதைப்பை உண்டாக்கியுள்ளது.

ஒரு கிராமத்தில் நில பிரச்சினை காரணமாக இரண்டு பிரிவினர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது, இதன் காரணமாக காவல்துறை அதிகாரிகள் சகோதரிகள் இருவர் மற்றும் இவர்களுடைய சகோதரன் ஆகியோரை கைது செய்தார்கள்.

காவல் நிலையத்தில் சகோதரனை காவல் துறை அதிகாரிகள் கண்மண் தெரியாமல் அடிப்பதை பொறுத்துகொள்ள முடியாத சகோதரிகள் இருவர் தனது சகோதரனை காப்பாற்ற முற்பட்டார்கள். இதனால் கோபமடைந்த காவல்துறையை சார்தவர்கள் அவ்விரு பெண்களின் தலை முடியைப் பிடித்து தரதரவென்று இழுத்து சென்று அடித்து உதைத்தார்கள்.

இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய காவல்துறையினரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Up police Dragged Sisters by Hair, Thrashed and beaten Them in Public

 

Related posts