அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றத்தை தவிர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

IAS officers minimum tenure posting : on Thursday, the Supreme Court have drastically reduced political pressure on top bureaucrats by ordering that they should get an assured minimum tenure in their posting.

IAS officers minimum tenure posting : Supreme Court ordered

மாநில அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வேலைசெய்யும் காலஅளவை மத்திய அரசாங்கம் நிர்ணயம் செய்ய வேண்டும். அதை வரும் 3 மாதங்களுக்கும் மத்திய அரசாங்கம் ஆலோசனை செய்து முடிவு செய்ய வேண்டும் எனவும் தங்கள் மேல் உள்ள அரசியல் எஜமானர்களுடைய தனிச்சையாக ஆதாரமின்றி சொல்லும் உத்தரவுகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பின்பற்றி நடைமுறை படுத்தவேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றும் உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

ஐ.ஏ எஸ். அதிகாரிகளுடைய பணி நியமனமும் பணியிட மாற்றமும் முடிவு செய்து நடைமுறைபடுத்த சிவில் சர்வீஸ் வாரியம் என்ற ஓர் துறையை அமைக்க கோரியும், நிர்வாக முடிவுகள் மற்றும் நடைமுறை படுத்துதலில் அரசியல் புள்ளிகளின் தலையீடுகள், ஊழல் போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரிக்கை விடுத்தும் பொதுநலன் மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்தது. மேலும் அரசியல்வாதிகளுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக அதிகாரிகள் பலிகடா அக்கபடுவதை தடுக்க தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மாநில அரசாங்கத்துக்கு உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி ஓர் பதவியில் நியமனம் செய்யப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடைய பணிக்காலம் ஒரு குறிப்பிட்ட காலவரம்பு கொண்டதாக இருக்க வேண்டும் எனவும், இதையெல்லாம் முடிவு செய்வதற்காக ஒரு சிவில் சர்வீஸ் வாரியத்தை 3 மாதத்திற்குள் அமைக்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

மேலும் அடிக்கடி அதிகாரிகளை இடமாற்றம் செய்யபடுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும், அப்படி ஒரு கால அவகாசம் அவர்களுக்கு கொடுத்தால்தான் அரசாங்கத்தின் கொள்கைகளூம், நலத்திட்டங்களும் ஏழை மக்களுக்கு சென்றடையும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

IAS officers minimum tenure posting

on Thursday, the Supreme Court have drastically reduced political pressure on top bureaucrats by ordering that they should get an assured minimum tenure in their posting.

 

Related posts