குடும்ப சண்டையில் பெண் குழந்தையை இரயிலில் இருந்து எறிந்த தந்தை கைது

Father who throw his girl baby into Thamirabarani  river from a moving train after  quarelling with his wife in Tirunelveli was arrested by police

Father who throw his girl baby into Thamirabarani  river from a moving train

குடும்ப சண்டையில் பெண் குழந்தையை இரயிலில் இருந்து ஆற்றில் வீசி எறிந்த கொன்ற தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்து உள்ள புளியரையைச் சார்ந்தவர் முருகன்(வயது 30). இவருடைய மனைவி பூமாரி. இவர்களுக்கு குழந்தைகள் முருகேஸ்வரி(வயது 3) மாரிச்செல்வி(வயது 6 மாதம்) ஆகியோர் உள்ளனர்.

கூலி வேலை பார்த்துவந்த முருகனுக்கு வருமானம் பற்றாகுறையாக உள்ளதால் குடும்பம் செலவுக்கு சிரமப்பட்டு வந்தார். சென்ற 27ம் தேதி நாகர்கோவிலில் இருக்கும் உறவினர் இல்லத்திற்குச்சென்று விட்டு இரயிலில் திருநெல்வேலிக்கு புறப்பட்டார்கள். இரவு சுமார் 9.30 மணிக்கு நெல்லைக்கு முன் தாமிரபரணி ஆற்றின் மேல் இரயில் சென்றுகொண்டிருந்த போது தம்பதியருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது முற்றி ஆத்திரமடைந்த முருகன், தனது பெண் குழந்தை மாரிச்செல்வியை தூக்கி ஆற்றில் வீசினார்.

அதன் பின் தனது குழந்தையை காணவில்லை என்று கூறி சமாளித்தார். தனது குழந்தையை கேட்டு, பூமாரி கதறினார். இருந்தும் அவரை அழைத்து கொண்டு ஊருக்கு சென்றுவிட்டார். இதை தொடர்ந்து நேற்று காலை தாமிரபரணி ஆற்றின் ஓரம் குழந்தையை எறிந்த இடத்தில் தம்பதியர் இருவரும் தேடினார்கள். தண்ணீரில் அவர்களது குழந்தை யின் சடலம் ஊதிய நிலையில் கிடந்துள்ளது.

இந்த நிலையில் அங்கே குளித்து கொண்டிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்கள்.
இதனைத்தொடர்ந்து முருகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Father who throw his girl baby into Thamirabarani  river from a moving train after  quarelling with his wife in Tirunelveli was arrested by police

Related posts