Weight reducing contest organized by DUBAI municipality : Ahmad al-Sheikh a 27 year old Syrian architect got the first prize worth of 10048 dirhams – 63 grams of gold by losing 26 kilograms .
அரபு நாடான துபாயில் உடல் எடையை வேகமாக குறைத்து காட்டியவர்களுக்கு தங்க பரிசு கொடுக்கப்பட்டது. இந்த உடல் எடை குறைப்பு போட்டியில் முதல் பரிசை தட்டி சென்ற சிரிய நாட்டை சேர்ந்தவருக்கு 63 கிராம் தங்கம் பரிசாக கொடுக்கப்பட்டது.
மக்களிடையே குண்டான தன்மைக்கு எதிரான விழிப்புணர்ச்சி ஏற்படுத்த உடல் எடையை குறைத்து காட்டும் போட்டி ஒன்றை துபாய் நகர சபை ஏற்பாடு செய்து நடத்தியது. அந்த போட்டியில் ஜெயிப்பவ்ரகளுக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து தேவைக்கு அதிகமாக குண்டான பல போட்டியாளர்கள், உடலின் எடை குறைவாக்கும் போட்டியில் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் தனது எடையை குறைவாக்கி தங்கம் வென்ற 2648 பேர்களில் ஒருவரான 27 வயதுடைய அகமது இப்ராகீம் அல் ஷேக் என்ற நபர் முதல் பரிசை தட்டி சென்றார். இந்த உடல் எடை குறைப்பு போட்டியினுடைய ஆரம்பத்தில், 146.7 கிலோ எடையுடன் இருந்த போட்டியாளர் அகமது இப்ராகீம் போட்டியின் இறுதியில் தனது எடையை 26 கிலோ அளவிற்கு குறைத்திருந்தார். இந்த போட்டியில் 2-ம் மற்றும் 3-ம் இடங்களை பிடித்த போட்டியாளர்கள் முறையே 23 கிலோ மற்றும் 22 கிலோ எடை அளவிற்கு குறைத்திருந்தனர்.
இந்த உடல் எடை குறைப்பு போட்டியில் அனைவரை விடவும் அதிகமாக உடலின் எடையை குறைத்து முதல் பரிசு வென்ற அகமது இப்ராகீமிற்கு 63 கிராம் தங்கம் பரிசாக கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Weight reducing contest organized by DUBAI municipality : Ahmad al-Sheikh a 27 year old Syrian architect got the first prize worth of 10048 dirhams – 63 grams of gold by losing 26 kilograms
Weight reducing contest organized by DUBAI municipality : Ahmad al-Sheikh a 27 year old Syrian architect got the first prize worth of 10048 dirhams – 63 grams of gold by losing 26 kilograms
இதையும் படியுங்கள்
- சென்னை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் இனி தமிழிலும் கிடைக்கும்
- குடும்பத்தோடு சுற்றுலா செல்ல உலகின் தலை சிறந்த10 இடங்கள் பட்டியலில் கேரளம்
- பரம ஏழையாக குடிசையில் வாழ்ந்து வரும் மியான்மர் நாட்டின் இளவரசி
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: இந்தியாவில் 2018ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டி நடத்தபடுகிறது
அடுத்த செய்தி →: சென்னை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் இனி தமிழிலும் கிடைக்கும்


