சென்னையில் துப்பாக்கி முனையில் மருத்துவர் வீட்டில் பணம் நகை கொள்ளை

Chennai doctor’s wife robbed at gunpoint சென்னை அண்ணா நகரில் டாக்டரை கட்டிப்போட்டு துப்பாக்கிமுனையில் 75 சவரன் நகைகள், 4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் கிழக்கு 15-வது தெரு ‘க்யூ’ பிளாக்கில் வசித்து வருபவர் டாக்டர் ஆனந்தன். இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவராக உள்ளார். இவருடைய மகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். நேற்று ஆனந்தன், தனது மனைவி, பெரியம்மா மற்றும் வேலைக்கார பெண் மீனாவுடன் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் டாக்டர் ஆனந்தன் வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியை காட்டி ஆனந்தனை மிரட்டி வீட்டின் பீரோ சாவியை…

Read More

தமிழ்நாடு காவல் துறைக்கு புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குனர் : திரு.அசோக் குமார் நியமனம்.. Tamilnadu new DGP Mr.Ashok Kumar.

Tamilnadu new DGP – Mr.Ashok Kumar. தமிழ் நாடு காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குநராக உளவுத்துறை டி.ஜி.பி.யாக இருந்த திரு அசோக் குமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையினுடைய சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கே.ராமானுஜம் நவம்பர் மாதம் 4-ம் தேதியோடு பணிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி, அந்தப் பணிக்கு தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றிய திரு அசோக் குமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் திரு.மோகன் வர்கீஸ் சுங்கத் உத்தரவிட்துள்ளார். இதனிடையே மேலும், ஓய்வு பெறும் டி.ஜி.பி. திரு.ராமானுஜத்தை தமிழ்நாடு அரசின் ஆலோசகராக நியமித்து உள்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார். புதிய டி.ஜி.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு.அசோக் குமார், ஹரியாணா…

Read More

ஐந்து காசுக்காக 41 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் வழக்கு

DTC spent Rs 47,000 in case against conductor for loss of 5 paisa கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்னர் பயணி ஒருவரிடம் ஐந்து பைசா குறைவாக டிக்கெட் பணம் வாங்கியதாக நடத்துனர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கின் செலவு தற்போது நாற்பதாயிரத்தைத் தாண்டியுள்ளதாக டெல்லி போக்குவர்த்து கழகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 1973ம் ஆண்டு டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் (டி.டி.சி.) பணியாற்றிய நடத்துனர் ரன்பீர் சிங் என்பவர் பயணி ஒருவரிடம் 15 காசு மதிப்புள்ள டிக்கெட்டிற்கு 10 காசு மட்டுமே பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 1976ம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ரன்பீர். இதற்கு எதிராக தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ரன்பீருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் பட்டது. உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும்…

Read More

வாகா எல்லைச் சாவடியில் நேற்று (02 நவம்பர் 2014) மாலை நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைவீரர்கள் 3 பேர் உள்பட 55 பேர் சாவு. : பிரதமர் மோடி கண்டனம்…

Wagah Suicide attack : 55 Pakistani people, including women and children, were killed and about 200 were injured in a suicide bomb attack at the Wagah checkpoint near Lahore and along the India-Pakistan border on Sunday evening. No damage was reported on the Indian side. இந்திய – பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லைச் சாவடி அருகில் நேற்று (02 நவம்பர் 2014) மாலை நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தானை சார்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மூவர் உள்பட 55 பேர் இறந்தனர். மேலும் சுமார் 200 பேர் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வாகா… இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும், இடையே இருக்கும் எல்லைப் பகுதி . இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அமிர்தசரஸிலிருந்து பாகிஸ்தானுக்கு…

Read More

ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா அலைபேசிச்தொழிற்சாலை மூடல்.. : Sriperumbudur Nokia Factory closed

Sriperumbudur Nokia Factory closed ஸ்ரீபெரும்புதூரில் பெங்களூர் நெடுஞ்சாலையில் பிரபலமாக இயங்கி வந்த நோக்கியா அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலை சனிக்கிழமை மூடப்பட்டது. இதைநயடுத்து, அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தங்களுக்கு திரும்பவும் வேலை வழங்க வேண்டும் என கோரி தொழிற்சாலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த நோக்கியா அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலை வரும் நவம்பர் மாதம் முதல் தேதியான சனிக்கிழமை முதல் மூடப்படுவதாக நோக்கியா நிர்வாகம் முன்பே தெரிவித்திருந்தது. அதன்படி, 01/11/2014 – சனிக்கிழமை முதல் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வுத் திட்டம் மூலம் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 5 ஆயிரம் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில், தொழிற்சாலை மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்து வந்த 2000…

Read More

கலைஞர் டிவி க்கு ரூ.200 கோடி சட்ட விரோத பண பரிமாற்றம்… ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவு

A Raja, DMK MP Kanimozhi and others under section 120-B (criminal conspiracy) of IPC புதுடெல்லி, அக்.31: கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி, அவரது மனைவி தயாளு அம்மாள் உள்பட பத்து பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாளு அம்மாளை ரூ.5 லட்சத்திற்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இருவர் உத்தரவாதம் ஆகியவற்றின் பேரில் ஜாமீனில் விடுதலை செய்தார். கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்…

Read More

பெங்களூரில் கோயிலுக்குள் நுழைந்த எட்டு வயது தலித் சிறுவனை தடியால் தாக்கிய பூசாரி

He allegedly assaulted a seven-year-old Dalit boy at a temple in Nelamangala பெங்களூரில் கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவர்களை அங்கிருந்த பூசாரி அடித்து உதைத் துள்ளார். ஒரு சிறுவனை தடியால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட வர்கள் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க‌ சென்றபோது போலீ ஸார் துணையுடன் ஆதிக்க சாதியினர் கட்டப்பஞ்சாயத்து செய் துள்ளனர். பெங்களூரை அடுத்து நெலமங்களாவில் உள்ள ஜெயநகரை சேர்ந்தவர் ராஜ்குமார். செருப்பு தைக்கும் தொழிலாளியான இவருடைய மகன் சந்தோஷ் (7). அங்குள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறான். கடந்த 19-ம் தேதி ருத்ரேஸ்வரா கோயில் பூசாரியால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவன் சந்தோஷை சந்தித்துப் பேசிய போது அவன் கூறியதாவது: நானும் எனது நண்பர்களும் கிரிக்கெட் விளையாடிவிட்டு அருகில் உள்ள ருத்ரேஸ்வரா…

Read More

பிரபல இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள சர்வதேச குத்து சண்டை சங்கம் விதித்தது

International Boxing Association suspended pugilist Laishram Sarita Devi அண்மையில் நடந்து முடிந்த 2014-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியின் அரை இறுதி போட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி சிறப்பாக விளையாடிய போதும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பெற்றார். இதனால் வீராங்கனை சரிதா தேவி கடும் அதிருப்தி அடைந்து தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தையும் பெற மறுத்தத்தோடு மட்டுமல்லாமல் தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை தன்னை வென்ற தென் கொரியா வீராங்கனைக்கு அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், வெண்கலப்பதக்கம் சரிதா தேவியிடமே ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி மற்றும் மூன்று குத்து சண்டை பயிற்சியாளர்களையும் இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்க நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. The…

Read More

அள்ளி வழங்கிய சூரத் தொழிலதிபர் : தீபாவளியை முன்னிட்டு ஊழியர்கள் 500 பேருக்கு புது கார்

Diamond Merchant Does an Oprah, Gifts Cars, Homes, Jewellery to Employees சூரத்தில் தீபாவளியை முன்னிட்டு ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற வைர ஏற்றுமதி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், பிளாட் மற்றும் நகைகளை போனஸ் ஆக வழங்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. கிட்டதட்ட இன்பக்கடலிலேயே மூழ்கிப் போகும் அளவிற்கு போனஸை வாரி இறைத்துள்ளனர் இந்நிறுவனத்தினர். அந்நிறுவனத்தின் தலைவரான சாவ்ஜி தொலாக்கியா, தனது பணியாளர்களான கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களை அழைத்து கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை காண்பித்து அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஊழியர்களின்…

Read More

வறுமையின் காரணத்தால் தனது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

‘கணவனின் குடிப்பழக்கத்தால் குடும்பம் வறுமையில் வாடி அழுத குழந்தைக்கு பால் வாங்க கூட காசில்லாததால் அடித்து கொன்றேன்‘ என குழந்தை கொலையில் கைது செய்யப்பட்ட தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிபேட்டை கோயில் கரடு பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (28). இவரது மனைவி ஜோதிமணி (25). இவர்களுக்கு ஸ்ரீதேவி என்ற மகளும், ஒன்றரை வயதில் திவ்யதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். சத்யராஜுக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, வீட்டில் ஜோதிமணி அழும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது, குழந்தை திவ்யதர்ஷினி உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. அதுபற்றி விசாரித்தபோது, கணவர் சத்யராஜ், குழந்தையை அரிவாளால் தாக்கி கொன்று தீவைத்து கொளுத்திவிட்டு சென்று விட்டார்…

Read More