Sriperumbudur Nokia Factory closed ஸ்ரீபெரும்புதூரில் பெங்களூர் நெடுஞ்சாலையில் பிரபலமாக இயங்கி வந்த நோக்கியா அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலை சனிக்கிழமை மூடப்பட்டது. இதைநயடுத்து, அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தங்களுக்கு திரும்பவும் வேலை வழங்க வேண்டும் என கோரி தொழிற்சாலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த நோக்கியா அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலை வரும் நவம்பர் மாதம் முதல் தேதியான சனிக்கிழமை முதல் மூடப்படுவதாக நோக்கியா நிர்வாகம் முன்பே தெரிவித்திருந்தது. அதன்படி, 01/11/2014 – சனிக்கிழமை முதல் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வுத் திட்டம் மூலம் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 5 ஆயிரம் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில், தொழிற்சாலை மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்து வந்த 2000…
Read More