ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா அலைபேசிச்தொழிற்சாலை மூடல்.. : Sriperumbudur Nokia Factory closed

Sriperumbudur Nokia Factory closed

ஸ்ரீபெரும்புதூரில் பெங்களூர் நெடுஞ்சாலையில் பிரபலமாக இயங்கி வந்த நோக்கியா அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலை சனிக்கிழமை மூடப்பட்டது.

இதைநயடுத்து, அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தங்களுக்கு திரும்பவும் வேலை வழங்க வேண்டும் என கோரி தொழிற்சாலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த நோக்கியா அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலை வரும் நவம்பர் மாதம் முதல் தேதியான சனிக்கிழமை முதல் மூடப்படுவதாக நோக்கியா நிர்வாகம் முன்பே தெரிவித்திருந்தது.

அதன்படி, 01/11/2014 – சனிக்கிழமை முதல் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வுத் திட்டம் மூலம் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 5 ஆயிரம் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில், தொழிற்சாலை மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்து வந்த 2000 தொழிலாளர்களும் சனிக்கிழமை முதல் வேலையை இழந்தனர்.

தொழிற்சாலையில் வேலையில் இருந்த மீதமுள்ள 849 பணியாளர்களையும் விருப்ப ஓய்வில் செல்லும்படி தொழிற்சாலை நிர்வாகம் வற்புறுத்தி வந்த நிலையில், நோக்கியா தொழிலாளர் சங்கத்தினர், தொழிலாளர்கள், மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஓர் தனியார் கல்யாண மண்டபத்தில் வெள்ளியன்று நடந்தது. இந்த கூட்டத்தில்,விருப்ப ஓய்வை விரும்பி செல்லும் பணியாளர்களுக்கு ரூ. 6.50 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையில் இழப்பீடு வழங்க நோக்கியா நிர்வாகத்தினர் கூறியதாகத்தெரிகிறது.

இந்த திட்டத்திற்கு நோக்கியா இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தினரும் ஆதரவளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.

இந்நிலையில், நோக்கியா இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தைச்சார்ந்த நிர்வாகத்தினர், தொழிலாளர்களை கலந்தாலோசிக்காமல் தனிச்சையாக தாங்களேகவே கையெழுத்து போட்டுள்ளனர்.ஆதலால் தங்களுக்கு இழப்பீடு வேண்டாம், வேலைதான் வேண்டும்’ எனக் கூறி சனிக்கிழமையன்று காலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நோக்கியா தொழிற்சாலை நுழைவுவாயில் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் கலைந்து சென்றார்கள்.

Sriperumbudur Nokia Factory closed

Eight years after it came into being as one of the world’s largest mobile manufacturing facilities, Finnish telecom major Nokia’s Chennai plant is all set to suspend operations from Saturday due to its exclusion from the Microsoft-Nokia deal.

Nokia started operations at Sriperumbudur Factory near Chennai, the second biggest facilities by any global firm, in 2006 after Korean auto major Hyundai’s came up with its plant in the late 1990s.

After inking the agreement with the Tamil Nadu government in 2004, Nokia began operations at the facility. It directly employed 8,000 people and another 25,000 were associated indirectly with the firm when the facility was operating in full swing. The facility was producing some of the basic GSM handsets. It was serving the local market, besides exports. However, its decision to sell off the handset business to Microsoft Corp in a $ 7.5-billion deal early this year forced to keep the factory out of the agreement due to tax dispute with Indian authorities.

In March, the Tamil Nadu government served a Rs. 2,400 crore tax notice on Nokia, saying the firm had also sold products from the Chennai plant in the domestic market, instead of shipping them overseas. In a separate tax case, the Supreme Court had ordered Nokia India on March 14 to give a Rs. 3,500 crore guarantee before it transfers the plant to Microsoft.

The Nokia-Microsoft deal was completed on April 25, 2014, but the Chennai facility could not be transferred to Microsoft due to legal issues related to tax demand by the Indian government. in a statement early this month, Nokia said Microsoft had informed the company it would be terminating manufacturing services defined in the deal, effective from November 1, 2014.

“In the absence of further orders from Microsoft, Sriperumbudur Nokia Factory will suspend handset production facility from November 1,” Nokia authorities said. The company had also said the asset freeze imposed by the tax department prevents Nokia from exploring potential opportunities for transfer of the factory to a successor to support the long-term viability of the established, fully functional electronics manufacturing ecosystem.

Advertisement :

Tailoring classes conducted for women at nominal cost at Mogappair by Chennai fashion institute and tailoring : http://www.chennaifashioninstitute.com/

Related posts