கலைஞர் டிவி க்கு ரூ.200 கோடி சட்ட விரோத பண பரிமாற்றம்… ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவு

A Raja, DMK MP Kanimozhi and others under section 120-B (criminal conspiracy) of IPC

புதுடெல்லி, அக்.31: கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி, அவரது மனைவி தயாளு அம்மாள் உள்பட பத்து பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாளு அம்மாளை ரூ.5 லட்சத்திற்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இருவர் உத்தரவாதம் ஆகியவற்றின் பேரில் ஜாமீனில் விடுதலை செய்தார்.

கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், குசேகான் குருட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் சாகித் உஸ்மான் பல்வா, விநோத் கோயங்கா, ராஜீவ் அகர்வால், கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் முரானி, இயக்குனர் அமிர்தம் ஆகியோர் உள்பட 10 பேர் மீதும், 9 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டதாக அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுகள் பதிவு தொடர்பான உத்தரவை தயாரிக்கும் பணி முடிவடையவில்லை.

இதையடுத்து, அக்டோபர் 31ஆம் தேதி (இன்று) உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி ஒ.பி.சைனி வழக்கை ஒத்திவைத்தார்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதி சைனி முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, கருணாநிதியின் மருமகன் அமிர்தம் மற்றும் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா,

சரத்குமார் உள்பட 10 பேர் மீதும், கலைஞர் தொலைக்காட்சி உள்பட 9 நிறுவனங்கள் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Kanimozhi, Raja and Dayalu Ammal in Kalainghar TV 2G Scam

ராசா, கனிமொழி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றச்சாட்டுக் களை மறுத்தார்கள். எனவே இது குறித்து விசாரணை நடைபெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். மீண்டும் இத்தகைய குற்றத்தை செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் ராசா, கனிமொழி உள்ளிட்டவர்களை ஜாமீனில் விடுவிப்பதாகவும் நீதிபதி ஓ.பி.சைனி கூறினார்.

தயாளு அம்மாளை ரூ.5 லட்சத்திற்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இருவர் உத்தரவாதம் ஆகியவற்றின் பேரில் ஜாமீனில் விடுதலை செய்தார். மேலும், நவம்பர் 11ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்றும் நீதிபதி சைனி அறிவித்துள்ளார்.

English Summary :

New Delhi: A special court on Friday framed charges against former telecom minister A Raja, DMK MP Kanimozhi and others under section 120-B (criminal conspiracy) of IPC and under provisions of Prevention of Money Laundering Act in the 2G scam. The court also framed charges against Dayalu Ammal, wife of DMK chief M Karunanidhi, Swan telecom promoters Shahid Usman Balwa and Vinod Goenka in the money laundering case. The court said prima facie charge of money laundering has been made out against all 19 accused chargesheeted by the Enforcement Directorate (ED).

Earlier, the ED had chargesheeted 19 accused — 10 individuals and nine firms — in the case saying that the transaction of Rs 200 crore, which was allegedly paid to DMK-run Kalaignar TV, was “not genuine” and it was a “bribe for grant of telecom licences to DB Group companies”. However, Raja, Kanimozhi and all other accused have pleaded not guilty and seek trial in the case. In August, A Raja, Kanimozhi and eight other accused in a 2G scam-related money laundering case were granted bail by a special court which said that considering their conduct, there was “no likelihood” that they will commit such offence again.  Special CBI Judge O P Saini had also allowed the bail plea of 83-year-old Ammal on a personal bond of Rs five lakh with two sureties of the like amount.

A Raja, DMK MP Kanimozhi and others under section 120-B (criminal conspiracy) of IPC

Besides Raja and Kanimozhi, ED had named Shahid Usman Balwa and Vinod Goenka, Directors of Kusegaon Fruits and Vegetables Pvt Ltd Asif Balwa and Rajiv Agarwal, Kalaignar TV MD Sharad Kumar, Bollywood producer Karim Morani, Ammal and P Amirtham as accused in the case.

Advertisement : Tailoring classes in Chennai Mogappair.. Contact Chennai Fashion institute and Tailoring shop : 9884861088…

Related posts