Sathish from Tamilnadu has won Gold Medal in Commonwealth Games
தமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்
காமன்வெல்த் விளையாட்டு போட்டியின், எடைப்பிரிவில் 77 கி.கி., பளுதுாக்குதலில்,தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் தங்கத்தைவென்று அசத்தினார்.
காமன்வெல்த் விளையாட்டு,ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 77 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவிலிருந்து,சதீஸ் சிவலிங்கம் மற்றும்ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் தகுதிச்சுற்றில் அசத்தி பைனலுக்கு முன்னேறினர். இதில் தமிழகத்தை சேர்ந்த,சதீஸ் சிவலிங்கம் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும்’ஸ்னாட்ச்’ பிரிவில் 149 கி.கி., மற்றும் அதிகபட்சமாக 179 கி.கி., வரை ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் துாக்கினார். ஆக, சிவலிங்கம் ஒட்டுமொத்தம் 328 கி.கி., வரை துாக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். சக வீரரானரவி,ஒட்டுமொத்தமாக 317 கி.கி., வரை துாக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
Sathish from Tamilnadu has won Gold Medal in Commonwealth Games
Tamilnadu Sportsmen Mr. Sathish has won Gold Medal in Common Wealth 77 kg weight lifting game. Common Wealth Games are taking place in the Glasgow city of Scottland. From India, Mr. Sathish Sivalingam and Mr. Siva were participated in the Men’s Weightlifting Game. After clearing the first level, both of them were gone to the final stage. In this, Tamilnadu-based Mr. Sathish Sivalingam, has lifted 149 kg in the special Weight lifting zone, “Snatch” and a maximum of 179 kg in “Clean and Jerk” level. On a total, he has lifted 328 kg of weight and has won the Gold Medal. His co-sports men, Mr. Siva has won the Silver medal by lifting 317 kg of weight.
Advertisement: Plots/Land available in Sunguvarchatram, Sriperumbudur, Click here for details