Actor SV Sekar joined in BJP after meeting Narendra modi நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் நல்ல நேரம் பார்த்து இன்று பாஜக கட்சியில் சேர்ந்துள்ளார். அதிமுகவில் சேர்ந்து மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எஸ்வி சேகர். பின்பு காங்கிரஸில் இணைந்து விலகினார். இடையில் சில காலம் திமுக அனுதாபியாகவும் இருந்தார். சில மாதங்கள் எந்தக் கட்சியையும் சாராமலும் இயங்கி வந்த எஸ்வி சேகர் சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவரிடம் வாழ்த்தும், வாழ்த்துக் கடிதமும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மோடியின் ஆசியுடன் இன்று செவ்வாய் 12.15க்கு பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல கணேசன் உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்தினார். இதுகுறித்து எஸ்வி சேகர் கூறுகையில், நரேந்திர மோடியின் ஆசியுடன்தான் பாஜகவில் சேருகிறேன். கட்சியின் தமிழ் மாநில…
Read More நடிகர் எஸ்.வி.சேகர் மோடியின் ஆசியுடன் பா.ஜ.க வில் சேர்ந்தார்தலைநகர் எ.டி.எம் மையங்களில் காமலீலை
டெல்லி வாழ் காதல் ஜோடிகள் தற்போது ஏ.டி.எம் மையங்களை காதல் வளர்க்கப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் டெல்லி மெட்ரோ ரயிலில் ஜோடிகள் மிகவும் நெருக்கமாக இருந்த காணொளி இணையதளத்தில் வெளியானது. சிசிடிவி காணொளியை கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனைத் தொடந்து டெல்லி மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஜோடிகளை அறைகள், கழிவறைகளில் நேரம் செலவிட அனுமதிப்பதை பிரபல தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியது. தற்போது அந்தவகையில் சில ஜோடிகள் காதல் வளர்க்கும் களமாக ஏ.டி.எம். மையங்களை மையம் கொண்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஏ.டி.எம் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்புக் கேமராவில் பதிவான இந்தக் காட்சிகளை காவல் துறையினரே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். யாரும் நம்மைப் பார்க்கவில்லை, கண்காணிக்கவில்லை என்ற நோக்கத்தில் எல்லை மீறும்…
Read More தலைநகர் எ.டி.எம் மையங்களில் காமலீலைவருமான வரி துறை பிடியில் இயக்குனர் லிங்குசாமி
income tax raid in director lingusamy office in chennai வருமான வரி துறை பிடியில் இயக்குனர் லிங்குசாமி சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள இயக்குனர் லிங்குசாமியின் அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது. சோதனை நடக்கும்போது அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அலுவலகத்தில் இருந்தவர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. சோதனை முடிந்து அதிகாரிகள் முக்கிய பைல்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் சோதனை நடந்தபோது லிங்குசாமியோ, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸோ அலுவலகத்தில் இல்லை. லிங்குசாமி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது ஏன்? என்ற தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது. வெறும் இயக்குனராக இருந்த லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி எழில் இயக்கத்தில் தீபாவளி…
Read More வருமான வரி துறை பிடியில் இயக்குனர் லிங்குசாமிஇந்தியாவில் கழிவறை கட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்
bill gates foundation going to build toilet in india இந்திய அரசுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் பவுன்டேஷன் மூலம் இந்தியாவில் கழிவறைகளை கட்டித் தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்தியாவில் கழிவறைகள் இல்லாதது பெரிய குறையாக உள்ளது. உலகில் 1 பில்லியன் பேர் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். அதில் இந்தியாவில் மட்டும் 638 மில்லியன் பேர் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துகிறார்கள். மேலும் கழிவறைகள் இல்லாமல் இருக்கும் உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர். ஏழை மக்கள் கழிவறையை கட்ட செலவாகும் பணத்தை உணவு வாங்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். எனவே இந்திய அரசுடன் சேர்ந்து பில் கேட்ஸ் கழிவறை கட்டி தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். bill…
Read More இந்தியாவில் கழிவறை கட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிஇட மாற்றம்
6 IAS officers transferred in Tamilnadu தமிழ்நாட்டில் 6 ஆறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை பணி இடம் மாற்றப்பெற்றனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன் இதுகுறித்து வெளியிட்ட உத்தரவுவில்: திரு.எஸ்.கோபாலகிருஷ்ணன்: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் இதற்கு முன்பு வகித்த பதவி: மக்கள் தொகை ஆணைய கணக்கெடுப்பு இயக்குநர் திரு.ஸ்வரண் சிங்: தொழில் துறை ஆணையர் – தொழிற்சாலைகள் மற்றும் வணிகம் இதற்கு முன்பு வகித்த பதவி: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.என்.எஸ்.பழனியப்பன்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர்(பஞ்சாயத்துராஜ்). இதற்கு முன்பு வகித்த பதவி: தொழில் துறை முதன்மைச் செயலர் திரு.சி.வி.சங்கர்: தொழில் துறை முதன்மைச் செயலாளர். இதற்கு முன்பு வகித்த பதவி:ஊரக வளர்ச்சி மற்றும்…
Read More தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிஇட மாற்றம்பாகிஸ்தானில் புதைத்த சடலத்தை தோண்டியெடுத்து வீசி கொடுமை
Religious gang Removed Hindu dalit dead Body From the Grave yard in Pakistan பாகிஸ்தான்: இஸ்லாமியருக்கு ஒதுக்கிய சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இந்து மதத்தை சேர்ந்த தலித் வாலிபரின் சடலம் பின்னர் தோண்டி எடுக்கப்பட்டு வெளியில் வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது. பாகிஸ்தானில் இருக்கும் சிந்து பகுதியில், இந்து தலித் இனத்தை சேர்ந்த புரோ பீல் எனும் நபர் சாலை விபத்து ஒன்றில் இறந்தார். இறுதி சடங்கு செய்து அவரது உடலை உறவினர்கள் பதின் மாவட்டத்தில் உள்ள ஹாஜி பகீர் எனும் சுடுகாட்டில் அடக்கம் செய்தார்கள். பின்னர், அடக்கம் செய்த சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கும்பல் ஒன்று அங்கு வந்து புரோ பீல் உடலை தோண்டி எடுத்து வெளியே வீசினார்கள். இஸ்லாமிய சமுதாயத்தினர் சுடுகாட்டில் ஒரு இந்து உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க…
Read More பாகிஸ்தானில் புதைத்த சடலத்தை தோண்டியெடுத்து வீசி கொடுமைஎரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி அமைச்சர் மொய்லி மெட்ரோ பயணம்
Indian Petroleum minister Veerappa Moily travled in Metro rail to his office எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று புது தில்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோலிய விலை உயர்வை கட்டுபடுத்த ‘எரிபொருள் சிக்கனம்’ மிக அவசியம் எனும் கருத்தை பல சமயங்களில் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார் அமைச்சர் வீரப்ப மொய்லி. கடந்த மாதம் ‘எரி பொருள் சிக்கனம்’ சம்பந்தமாக உரையாற்றும் போது அவரும், அவரது அலுவலக ஊழியர்களும் வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் மெட்ரோ இரயில் மற்றும் இதர பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தப் போவதாக கூறியிருந்தார். அவரது அறிவிப்பின் படி இன்று காலை அவர் அலுவலகத்திற்கு கிளம்பி வீட்டிற்கு அருகில் உள்ள மெட்ரோ இரயில்…
Read More எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி அமைச்சர் மொய்லி மெட்ரோ பயணம்மூன்று அமெரிக்க வேதியல் நிபுணர்களுக்கு நோபல் பரிசு
The Nobel prize for 2013 in chemistry was awarded by the Royal Swedish Academy of Sciences 2013 ஆம் ஆண்டிற்கான வேதியியல் சாதனைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்த நோபல் பரிசு மூன்று அமெரிக்க நிபுணர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு வேதியியலுக்காக வார்ஷெல், மார்ட்டின் கார்ப்லஸ், மைக்கேல் லெவிட், ஆகிய மூன்று அமெரிக்கர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. நிபுணர்கள் மூவருக்கும் மூலக்கூறுகள் மாதிரி வடிவமைப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த மூவரின் கண்டுபிடிப்பு இன்றைய கணினிகளில் உபயோகபடுத்தப்படுகிறது. திரு.மார்ட்டின் கார்ப்லஸ் ஸ்ட்ரஸ்டபோர்க் மற்றும் திரு.ஹாவர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள். திரு.ஆரிய வார்ஷெல் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணியில் இருக்கிறார். திரு.மைக்கேல் லெவிட் ஸ்டாண்ட்போர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர். English Summary: The Nobel prize for 2013 in chemistry was awarded by…
Read More மூன்று அமெரிக்க வேதியல் நிபுணர்களுக்கு நோபல் பரிசுஆந்திராவில் தொடர்ச்சியான போராட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Telangana turmoil – Is President Rule the only option left? கடலோர ஆந்திராபிரதேசம் மற்றும் இராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திராவில் தெலுங்கானாவுக்கு எதிராக உச்சகட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது. 2 மாதத்திற்கும் மேலாக இந்த போராட்டங்கள் நீடித்து வருகிறது. இதனால் ஆந்திரபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டிய அவசியத்திற்கு மத்திய அரசு தள்ளபட்டிருக்கிறது. மத்திய அரசின் தெலுங்கானாஅறிவிப்பால் சுமார் 2 மாத காலமாக போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. ஆகையால் உச்சகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்துடன் ஹைதராபாத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஹைதராபாத்திலும், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியிலும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் போக்குவரத்து, மின்சாரம்,கல்வித்துறை ஊழியர்கள் என எல்லாத்தரப்பினரும் ஈடுபட்டு வருகிறார்கள். மின்சார வாரிய ஊழியர்கள்…
Read More ஆந்திராவில் தொடர்ச்சியான போராட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்புவடமேற்கு டெல்லி சிறுவர் காப்பகத்திலிருந்து 33 பேர் தப்பியோட்டம்
33 inmates escape from Delhi juvenile home, 14 held வடமேற்கு டெல்லி சிறார்கள் காப்பகத்தில் இருந்த ருபாய் 35 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து 33 இளம் குற்றவாளிகள் தப்பி ஓடிய சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரைப்படங்களில் வரும் சிறை உடைப்பு காட்சிகள் போன்றே சிறையை உடைத்துவிட்டு இளம் குற்றவாளிகளான இந்த சிறுவர்கள் செய்து தப்பியோடியிருக்கின்றனர். அந்த காப்பகத்தில் பணம் வைத்திருக்கும் பெட்டகத்தை உடைத்து விட்டு அதில் இருந்த ருபாய் 35 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, சுமார் 50 சிறுவர்கள் அங்கிருந்த காவலாளியை அடித்து, உதைத்து காயப்படுத்தினார்கள். அங்கிருத்த கண்ணாடி ஜன்னல்களை கற்களால் அடித்து உடைத்து சூறையாடிய இளம் குற்றவாளிகள், மதில் சுவர் மேல் பகுதியில் உள்ள முள் வேலியின் மேல் மெத்தைகள் விரித்து காப்பகத்தின் நிர்வாக அலுவலக பகுதிக்கு சென்றுள்ளர்கள். பிறகு சமையல் அறையில் இருந்த…
Read More வடமேற்கு டெல்லி சிறுவர் காப்பகத்திலிருந்து 33 பேர் தப்பியோட்டம்

