அசிட் வீச்சில் இறந்த வினோதினியின் தாயார் விஷமருந்தி தற்கொலை

Karaikal Vinothini’s mother Saraswathi committed suicide

Karaikal Vinothini's mother Saraswathi committed suicide

காரைகாலில் அமில வீச்சில் இறந்த வினோதினியின் தாயார் சரஸ்வதி திடீரென விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதி இரவு, தீபாவளிப் பண்டிகையை தனது குடும்பத்தினர்களுடன் கொண்டாடிவிட்டு சென்னையில் இருந்து திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த வினோதினி மீது சுரேஷ் என்ற வாலிபர் ஆசிட் வீசினார்.

இந்த அசிட் வீச்சு நடந்ததற்கு மறு நாள் சுரேஷ் கைது செய்யப்பட்டான். அதே தினத்தன்று மேல் சிகிச்சைக்காக வினோதினி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர் விசாரணைகளுக்கு பின்பு கடந்த ஜனவரி மாதம் 167 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பிப்ரவரி 12-ஆம் தேதி வினோதினி சிகிச்சை பலனின்றி இறந்தார். குற்றவாளிக்கு இவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று நள்ளிரவு  வினோதினியின் தாயார் சரஸ்வதி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் வினோதினி அசிட் விச்சு தாக்குதலின் போதே தாயார் சரஸ்வதி தற்கொலைக்கு முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சீர்காழிக்கு அருகில் திருக்கடையூர் எனும் ஊரில் சரஸ்வதி தனது கணவருடன் வசித்து வந்தார். நேற்று கணவன், மனைவி இடையே ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சரஸ்வதி விஷம் குடித்தார். பின்னர்  உடனடியாக சரஸ்வதியை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். மருத்துவமனையில் சரஸ்வதி சிகி்ச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.

Karaikal Vinothini’s mother Saraswathi committed suicide

Karaikal Vinothini’s mother Saraswathi committed suicide in Thirukadayur yesterday

Related posts