சோனியாவே தெலுங்கனா பிரச்சனை முற்றுவதற்கு காரணம்: ஜெகன்மோகன்

Jaganmohan Reddy blames Sonia Gandhi for Telangana crisis

Jaganmohan Reddy blames Sonia Gandhi for Telangana crisis

ஆந்திர பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு மாநிலமாக ஆக்கும் மத்திய அரசினது முடிவை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று உண்ணாவிரதம் ஆரம்பித்தார். காங்கிரஸ் கட்சியின் இந்த தன்னிச்சையான ஒருதலைப்பட்ச செயல்பாட்டை எதிர்ப்பது மட்டும் இல்லாமல் தெலங்கானா பிரச்சனை மேலும் விரிவடைய சோனியா காந்தியே காரணம். அவர் மக்களுடைய  உணர்வுகளை திட்டம் போட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார் என  குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த ஒரு மாநிலத்தை இரண்டாக பிரித்து மற்றொரு மாநிலத்தை உருவாக்கி அதன் மூலம் வரும் கால சந்ததியினருக்கு ஒரு மிகபெரும்  மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறார். சோனியாகாந்தியின் தன்னிச்சையான சுயநல முடிவால் ஆந்திராவின் இரு தரப்பு மக்களும் பாதிக்கப்படுவது உறுதி. இதைப்பற்றி முற்றிலும் கவலையில்லாமல் தனது மகன் ராகுல்காந்தியை பிரதமராக ஆக்க மட்டுமே திட்டம் தீட்டி அதற்காக கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார் சோனியாகாந்தி என ஜெகன்மோகன்ரெட்டி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

Jaganmohan Reddy blames Sonia Gandhi for Telangana crisis

Jaganmohan Reddy begins fast for united Andhra Pradesh, blames Sonia Gandhi for ‘crisis’

Related posts