Tamil Nadu: Five die as tree falls near cremation ground பயணிகள் நிழற்குடை மீது ஆலமரம் சாய்ந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மழைக்காக ஒதுங்கிய தந்தை, மகன் உள்ளிட்ட 5 தொழிலாளர்களுக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணன் தேவன் பட்டியில் தனியார் திராட் சைத் தோட்டம் உள்ளது. இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வீட்டுக்குப் புறப் பட்டனர். அப்போது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஒரு டிராக் டரில் சென்ற நாராயணன் தேவன்பட்டியைச் சேர்ந்த சிங்கத் தேவர் (40), சுருளிபட்டியைச் சேர்ந்த குணசேகரன் (42), குன்னப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (38), திருப் பாண்டி (58), அவரது மகன் ரமேஷ் (32)…
Read MoreYear: 2014
லஞ்சம் வாங்கிய கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் கைது
Revenue inspector of Kelambakkam was arrested by Directorate of Vigilance & Anti-Corruption sleuths சென்னை,மே.21 காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருப்போரூர் ஒன்றியத்தில் பட்டிபுலம் எனும் ஊரை அடுத்து உள்ள புது இடையூர் குப்பம் எனும் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தனியார் பள்ளிக்கூட நிர்வாகம் சுமார் 3 ஆண்டுகளுக்கு ஓர் முறை பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு (NOC) தடையில்லா சான்றிதழ் எனும் அனுமதிசான்றிதல் புதுப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டும் ஆய்வு நடத்தி பள்ளிக்கு அனுமதிச்சான்று வழங்கக்கோரி பள்ளிக்கூட நிர்வாகி கண்ணன் திருப்போரூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்து இருந்தார். இதுசம்பந்தமாக பள்ளிக்கட்டிடங்களை ஆய்வுசெய்து அறிக்கை வழங்கும்படி கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனுக்கு தாசில்தார் ஆறுமுகம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேரில் ஆய்வு செய்த மணிவண்ணன், அனுமதி சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் செய்துவந்தார். இதுகுறித்து பள்ளிக்கூட நிர்வாகி…
Read Moreஜி.கே.வாசன் தலைமையில் புதிய கட்சி ???. 'தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்' தொடக்கம்???
Former Central Minister G K Vasan Plans to starts a New political Party சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கொடுக்காவிட்டால் “தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்” எனும் பெயரில் புதிய கட்சியை நிறுவ முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சி மேலிடம் வற்புறுத்தியும் தான் போட்டியிட முடியாது என கூறி மறுத்துவிட்டார். அதனால் காங்கிரஸ் தலைமை அவர் மீது அதிருப்தியாக இருந்தது. அந்த அதிருப்தியை தணிக்கும் வகையில் கட்சிக்காக சூறாவளி சுற்று பயணம் செய்து கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். எனினும் அது எதுவும் பலன் தரவில்லை. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து, 38 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், இப்போது…
Read Moreஊழலும், விலைவாசி உயர்வும் தான் காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கிய காரணம் – மன்மோகன் சிங்
Abnormal Corruption and Price hike lead to Congress failure in Parliament election 2014 : Man Mohan Singh புதுடெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைகிறது, ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது. காங்கிரஸ் 50–க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எவருமே எதிர் பார்க்காத இந்த படு தோல்வி அந்த கட்சியின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எதுவும் காங்கிரசுக்கு சாதகமான இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் இந்த படுதோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் கூறியுள்ளார்கள். மேலும் இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு , சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் பதவி விலக விருப்பம் தெரிவித்தார்கள். எனினும் அதை…
Read Moreகொலம்பியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது 32 குழந்தைகள் பலி
32 children die in Colombia bus fire கொலம்பியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அதில் பயணம் செய்த 32 குழந்தைகள் பரிதாபமாகப் பலியானார்கள். மேலும், படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொலம்பியாவின் தலைநகரான பகோட்டா நகரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஃபண்டாசியன் என்ற நகரின் சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் அங்கிருந்த தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சாலையில் ஓடிக் கொண்டிருந்த போது திடீரென பேருந்தில் தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று பரவியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 32 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அங்கிருந்து…
Read Moreபத்திரிகை நிருபர்கள் மீது திமுக தொண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்- மன்னிப்பு கோரியது திமுக தலைமை..
DMK Cadres : Journalists Attacked by DMK Cadres infront of DMK treasurer M K Stalin பத்திரிகை நிருபர்கள் மீது திமுக தொண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்- மன்னிப்பு கோரியது திமுக தலைமை.. பத்திரிகை நிருபர்கள் திமுக தொண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக சார்பாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திமுக அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதையடுத்து, அவரது ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் அவரது வீட்டில் குவிந்திருந்தனர். அப்பொழுது பத்திரிகை நிருபர்கள் சிலர் மூ க ஸ்டாலின் மீது தவறான விமர்சனம் வைத்ததாக நினைத்துக்கொண்டு, திமுகவினர் சிலர் அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி திமுக அறிக்கையில் அங்கே கூடியிருந்த கூட்டத்தினருடன் தீய சக்திகள் சில ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம். ஆயினும், பத்திரிகை நிருபர்கள் மீது நடைபெற்ற…
Read Moreபா.ஜ.க. மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடாது : வெங்கையா நாயுடு.,
RSS has no role in government formation : Senior Leader of BJP Mr.Venkaiah Naidu பா.ஜ.க. மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடாது : வெங்கையா நாயுடு., புதுடில்லி:மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையீடும் எந்தவிதத்திலும் இருக்காது என பா.ஜ.க., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மேலும் அரசாங்க நிர்வகாக விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடும் எனும் பேச்சுக்கே இடமில்லை. அரசு செயல்பாட்டில் ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிடாது. நாங்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்து வந்தவர்களே. மரியாதையை நிமித்தமாக நான் இங்குள்ள மூத்த தலைவர்களை சந்திக்க மட்டுமே வந்தேன். இது எங்களுடைய வழக்கமாக செயல்பாடுகளில் ஒன்று தான். மேலும் ஆர். எஸ்.எஸ்., இயக்கம் ஒரு தேசபற்றை வளர்க்கும் தேசிய நலன் அமைப்பு. இந்த இயக்கத்தில், நம் நாட்டினுடைய நலன்கள் பற்றி ஆலோசனை வழங்கி அதன் மூலம்…
Read Moreலாவோஸ் நாட்டில் விமான விழுந்து நொறுங்கியதில் பாதுகாப்பு அமைச்சர் உள்பட 16 பேர் சாவு
An Aircraft carrying senior Laos government officials along with Defence Minister crashed on Saturday in a forested area of the Southeast Asian country, killing the defence minister and at least 16 other people. லாவோஸ் நாட்டில் விமான விழுந்து நொறுங்கியதில் பாதுகாப்பு அமைச்சர் உள்பட 16 பேர் பலி லாவோஸ் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் உள்பட16 பேர் இறந்தனர். இது பற்றி அந்த நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாவது:- லாவோஸ் நாட்டுக்கு சொந்தமான ஏ.என்.74-300 எனும் வகை ராணுவ விமானம், வடக்கு பகுதியான ஷியாங் குவாங் எனும் மாகாணத்தில் நொறுங்கி விழுந்ததில் டெளவாங்சே பிச்சிட் மற்றும் ஐந்து மூத்த அதிகாரிகள் உட்பட…
Read Moreஉலகத்தின் முதல் பவர் பில்டிங் நார்வே நாட்டில் கட்டப்பட்டுள்ளது
World’s “most environmentally-friendly office building” opens in Norway இன்றைய காலத்துக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கப் பல வழிகள் இருந்தாலும் சூரிய ஒளியைப் பயன்படுத்தினால் போதும். அதற்கு மத்திய அரசு மான்யம், மாநில அரசின் ஊக்கத் தொகையெல்லாம் கொடுத்தாலும் நம்மூரில் பவர் கட்டிலாமல் வாழத் தயங்கி இந்த திட்டத்தை அதிகம் கண்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில் உலகத்தின் முதல் பவர் பில்டிங் நார்வே நாட்டில் ரெடி ஆகி இருக்கிறது. 6லட்சத்தி 50 ஆயிரம் கிலோவாட்டை முழுங்கி கொண்டிருந்த இந்த பில்டிங் இப்ப தனக்கு தேவையான மின்சாரத்தை விட அதிகப்படியா தயாரிச்சி மத்த பில்டிங்குக்கும் கொடுக்குதாம். இதுல வெறும் சோலார் தகடு மட்டுமல்லா – சூடு – குளிர் தாங்கும் வண்ணம் இதன் கட்டமைப்பு மிக மாறுதாலாக புது டெக்னாலஜியை வைத்து கட்டியிருப்பதால் இதன் தற்போதைய…
Read Moreசென்னையில் வாக்கு எண்ணும் மையங்கள் உள்பட 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கப் போவதாக மர்ம நபர் மிரட்டல்
bomb threat vote counting centres chennai சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த மாதம் 7ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை 9 கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 42 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் வாக்கு எண்ணுகையில் மையங்கள் உள்பட சென்னையில் 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கப் போவதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். சென்னையில் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் இந்த 3 மையங்கள் உள்பட 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று…
Read More