உ.பி.யில் 2 ரயில்கள் மோதி விபத்து 20 பேர் பலி

20 feared dead as Gorakhdam Express rams into goods train சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் சான்ட் கபிர் நகர் ரயில் நிலையத்தின் அருகே இந்த விபத்து சம்பவித்துள்ளது. சரக்கு ரயில் மீது கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய வேகத்தில் அதன் 3 பெட்டிகள் தடம் புரண்டன. தண்டவாளத்தின் அருகேயுள்ள மரங்களில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மோதி சிதறின. இந்த கோர விபத்தில் கோரக்தாம் ரயிலின் 6 பெட்டிகளில் இருந்த பயணிகள் படுகாயமடைந்தனர். அதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்து உயிருக்கு போராடிவருகிறார்கள். கோரக்பூர் மற்றும் கோண்டா ரயில் நிலையங்களில் இருந்து மீட்பு ரயில்கள் சம்பவ இடத்தை…

Read More

பிரதமர் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் தமிழக, கேரள, கர்நாடக முதல்வர்கள்

Karnataka, Kerala Cong CMs to skip Modi’s swearing-in, Jaya keeps up suspense மோடி பதவியேற்பு விழாவில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளப் போவது இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறது. நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா விழாவை புறக்கணிப்பதோடு பிரதிநிதியையும் அனுப்ப மாட்டார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட வேலைகள் இருப்பதால் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும்…

Read More

ஒடிஷா மானிலத்தில் போண்டா பழங்குடியினத்தில் இருந்து முதல் எம்.எல்.ஏ. தேர்வு!!

Bonda tribe sends its 1st MLA to Assembly இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் போண்டா பழங்குடியினத்தவரில் இருந்து முதலாவது எம்.எல்.ஏவாக தம்பரு சிசா தேர்வ்சு செய்யப்பட்டுள்ளார். ஒடிஷா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் ‘போண்டா ஹில்ஸ்” என்ற மலைப்பகுதி உள்ளது. இங்கு போண்டா எனப்படும் ஆதிபழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் இப்பகுதியில் மட்டுமே போண்டா பழங்குடி இனத்தவர் வாழ்கின்றனர். இப்பழங்குடி இனப் பெண்கள் கழுத்து நிறைய பெரிய வளையங்கள், காலுக்கு மேலான துண்டு போன்ற கீழாடை, உடல் முழுக்க கயிறு, பாசிகளால் மறைக்கப்பட்ட மேலாடை, தலையில் சணல் வளையம் என ஆதிகால பண்பாட்டை இன்னமும் பின்பற்றுகிறவர்களாக போண்டா பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். போண்டா பழங்குடியின திருமணமுறை மிகவும் வித்தியாசமானது. சிறுவர்களைத்தான் இளம்பெண்கள் திருமணம் செய்து கொள்வது வழக்கம். போண்டா ஹில்ஸ் பகுதி இப்போது மாவோயிஸ்டுகளின்…

Read More

10ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவ–மாணவிகள் மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை!

Like any other years, this year also girls have outnumbered boys in pass percentage in the SSLC exam. பத்தாம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் 18 மாணவிகள், ஒரு மாணவர் என 19 பேர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். 125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், 321 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் மாணவிகள் 93.6 சதவீதம் பேர் அதாவது 4 லட்சத்து 69 ஆயிரத்து 810 பேர்…

Read More

ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் மீது துப்பாக்கி தாக்குதல் : 3 பேர் சாவு…

Indian consulate in western Afghanistan main city near the border with Iran was attacked காபுல், மே 23- ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரட் நகரில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். நவீன துப்பாக்கிகளை ஏந்திவந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் இந்திய தூதரகத்தின் மீது சரமாரியாக துப்பாகியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள். இந்த துப்பாக்கி தாக்குதலில் உண்டான சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், தூதரகத்தை சேர்ந்த பணியாளர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார். மேலும், தூதரகத்தினுள் நுழைய…

Read More

உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் இந்திய நடிகர் ஷாருக்கானுக்கு இரண்டாவது இடம்

Shah Rukh Khan 2nd richest celebrity in the world, beats out Johnny Depp and Tom Cruise உலகின் இரண்டாவது பெரிய பணக்கார நடிகர் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெற்றுள்ளார். வெல்த் எக்ஸ் நிறுவனம் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்களில் பணக்காரர்களாக உள்ளவர்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் தான். ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான ஜெர்ரி சீன்ஃபீல்டு தான் உலகின் பணக்கார நடிகர் ஆவார். அவரின் சொத்து மதிப்பு 820 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். உலகின் இரண்டாவது பணக்கார நடிகர் ஷாருக்கான். நடிகர், தயாரிப்பாளர் மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர் என்று பல முகம் கொண்ட ஷாருக்கின் சொத்து மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டாலர்…

Read More

மகாபலிபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி, நடிகர் நாசர் மகன் கவலைக்கிடம்

Actor Nasser’s son Faizal met with an accident while 3 out of 4 members who accompanied him in a car died. மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். நடிகர் நாசர் மகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் நாசர் மகன் பைசல். இவர் இன்று காலை 4 பேருடன் காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் மகாபலிபுரம் அருகே உள்ள மணமை கிராமத்தில் சென்று கொண்டிருக்கையில் விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர். பலியானவர்கள் சென்னையை சேர்ந்த சங்கர் (23), சித்து (22) என்பது தெரிய வந்தது. மற்றொருவர் பெயர் தெரியவில்லை. படுகாயம் அடைந்த பைசல் மற்றும் ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பைசலுக்கு…

Read More

சென்னையில் லேசான நில அதிர்வு : சென்னை வாசிகள் அச்சம்

Earthquake off Odisha sparks tremors, panic in Chennai வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வடமாநிலங்கள் மற்றும் சென்னையில் பல இடங்களில் பூமி அதிர்ந்தது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள பாராதீப் துறைமுகத்தில் இருந்து 60 கிமீ தொலைவில் வங்கக் கடலில் 10 கிமீ ஆழத்தில் புதன்கிழமை இரவு 9.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு, வட இந்தியா மற்றும் சென்னையில் சில இடங்களில் அதிர்வு உணரப்பட்டது. ஒடிஷா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் உத்தர பிரதேசத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சென்னையில் அடையாறு, போரூர், திருவல்லிக்கேணி, தி. நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதி…

Read More

சுவிஸ் நாட்டு கோடீசுவரர் முன்னாள் மனைவிக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கொடுத்துள்ளார்

This Is How Much The Most Expensive Divorce In History Costs முன்னாள் மனைவிக்கு 26 ஆயிரம் கோடி ரூபாயை நஷ்ட ஈடாகக் கொடுத்துள்ளார் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கோடீசுவரர் ஒருவர். இதன் மூலம் உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்து என்ற பெருமையை இவர்களது விவாகரத்து பெற்றுள்ளது. சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வருபவர் ரஷ்ய தொழிலதிபர் டெமிட்ரி ரெய்போலோவ்லிவ் (47). உரத்தொழிலில் செய்து வரும் இவரது சொத்து மதிப்பு 2010 ஆண்டில் 6.5 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டது. தற்போது 100 பில்லியன் டலர் என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவி எலினாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடினார்கள். இருவரும் ஒருமித்து விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்ததால் வழக்கு சுமூகமாக முடிந்தது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த…

Read More

நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள 186 உறுப்பினர்கள் மீது குற்றவழக்குகள்

நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள உறுப்பினர்களில் 186 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 16 ஆவது மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில், மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 34% ஆகும். 14ஆவது மக்களவையில் இந்த எண்ணிக்கை 24% ஆகவும், 15ஆவது மக்களவையில் 30% ஆகவும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான அமைப்பு, மக்களவை உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை ஆராய்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவில் மட்டும் 98 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 பேரில் 8 பேர் மீதும், அதிமுக வைச் சேர்ந்த 37 பேரில் 6 பேர் மீது குற்றவழக்குகள் நிலுவையில்…

Read More