நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள உறுப்பினர்களில் 186 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 16 ஆவது மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில், மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது 34% ஆகும். 14ஆவது மக்களவையில் இந்த எண்ணிக்கை 24% ஆகவும், 15ஆவது மக்களவையில் 30% ஆகவும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான அமைப்பு, மக்களவை உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை ஆராய்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவில் மட்டும் 98 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 பேரில் 8 பேர் மீதும், அதிமுக வைச் சேர்ந்த 37 பேரில் 6 பேர் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் மக்களவைக்குத் தேர்வான 4 உறுப்பினர்கள் மீதும் குற்ற வழக்குகள் இருக்கின்றன.
சதவிகித அடிப்படையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் முதலிடத்திலும், சிவசேனா கட்சி 2ஆவது இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திலும் உள்ளதாக” அந்ததகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
- சுவிஸ் நாட்டு கோடீசுவரர் முன்னாள் மனைவிக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கொடுத்துள்ளார்
- சென்னையில் லேசான நில அதிர்வு : சென்னை வாசிகள் அச்சம்
- தேனியில் ஆலமரம் விழுந்து 5 பேர் உடல் நசுங்கி பலி
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- கூட்டுறவுச் சங்க ஆவணங்களை உறுப்பினர் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்க முடியுமா? பதிவாளர் பார்க்கக்கூடிய பதிவுகளை மறுக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கக் கோரும் ‘படிவம் 7’ மொத்தமாகத் தாக்கல் என்ற புகார்: ஆராய்ந்து அறிக்கை தர தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தீர்ப்பாயம் புறக்கணிக்கலாமா? மின்சாரத் தீர்ப்பாய மறுஆய்வு உத்தரவை ரத்து செய்து ₹3.5 லட்சம் செலவுத் தொகை விதிப்பு
← முந்தைய செய்தி: தேனியில் ஆலமரம் விழுந்து 5 பேர் உடல் நசுங்கி பலி
அடுத்த செய்தி →: சுவிஸ் நாட்டு கோடீசுவரர் முன்னாள் மனைவிக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கொடுத்துள்ளார்

