மகாபலிபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி, நடிகர் நாசர் மகன் கவலைக்கிடம்

Actor Nasser’s son Faizal met with an accident while 3 out of 4 members who accompanied him in a car died.

Actor Nasser's son Faizal met with an accident while 3 out of 4 members who accompanied him in a car died.
Actor Nasser’s son Faizal met with an accident while 3 out of 4 members who accompanied him in a car died.

மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். நடிகர் நாசர் மகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் நாசர் மகன் பைசல். இவர் இன்று காலை 4 பேருடன் காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் மகாபலிபுரம் அருகே உள்ள மணமை கிராமத்தில் சென்று கொண்டிருக்கையில் விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர். பலியானவர்கள் சென்னையை சேர்ந்த சங்கர் (23), சித்து (22) என்பது தெரிய வந்தது. மற்றொருவர் பெயர் தெரியவில்லை. படுகாயம் அடைந்த பைசல் மற்றும் ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு பைசலுக்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளது, இருப்பினும் ரத்தம் நிற்காமல் தொடர்ந்து வெளியேறி வருவதால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் கிடைத்த உடன் நாசர் தனது மனைவி கமீலாவுடன் மருத்துவமனைக்கு விரைந்தார். கார் விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
பைசல் ‘சைவம்’ என்ற படத்தில் அறிமுகமாகி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts