20 feared dead as Gorakhdam Express rams into goods train
சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் சான்ட் கபிர் நகர் ரயில் நிலையத்தின் அருகே இந்த விபத்து சம்பவித்துள்ளது. சரக்கு ரயில் மீது கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய வேகத்தில் அதன் 3 பெட்டிகள் தடம் புரண்டன. தண்டவாளத்தின் அருகேயுள்ள மரங்களில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மோதி சிதறின. இந்த கோர விபத்தில் கோரக்தாம் ரயிலின் 6 பெட்டிகளில் இருந்த பயணிகள் படுகாயமடைந்தனர்.
அதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்து உயிருக்கு போராடிவருகிறார்கள். கோரக்பூர் மற்றும் கோண்டா ரயில் நிலையங்களில் இருந்து மீட்பு ரயில்கள் சம்பவ இடத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டுள்ளன. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுவருகின்றனர்.விபத்தில் தீவிரத்தை வைத்து பார்க்கும்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உத்தரபிரதேசத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 feared dead as Gorakhdam Express rams into goods train
20 people are feared dead after the Gorakhdham Express rammed a stationary goods train near Khalilabad in Uttar Pradesh. At least 10 passengers were injured. The incident took place this morning when the express train came on the same track as the goods train near Churaid Railway Station at the Sant Kabirnagar district some 230 km from state capital Lucknow. Six bogies derailed. Railway Board Chairman Arunendra Kumar said, “Relief work has begun, there are casualties but the exact figure is not known yet.” Narendra Modi, who takes over as Prime Minister today, expressed condolences. “Spoke to the Cabinet Secretary. Asked him to take an overview of the situation & ensure timely assistance to those injured,” Mr Modi tweeted. Rajnath Singh, who will be sworn in as part of the Narendra Modi cabinet today, tweeted his condolences for those who have been killed.