சென்னையில் வாக்கு எண்ணும் மையங்கள் உள்பட 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கப் போவதாக மர்ம நபர் மிரட்டல்

bomb threat vote counting centres chennai

bomb threat vote counting centres chennai

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த மாதம் 7ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை 9 கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 42 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் வாக்கு எண்ணுகையில் மையங்கள் உள்பட சென்னையில் 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கப் போவதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். சென்னையில் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் இந்த 3 மையங்கள் உள்பட 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று போனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று போலீசார் விசராணை நடத்தி வருகிறார்கள். மேலும் மிரட்டல் விடுத்ததில் உண்மை உள்ளதா அல்லது புரளியா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

An unidentified person called and said that bombs will explode at 5 places including the 3 vote counting centres in Chennai on friday.

Related posts