Death toll in Turkish mine blast rises above 200, many still trapped மேற்கு துருக்கியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து மற்றும் தீ காரணமாக பலியானோர் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் டேனர் இல்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேற்கு துருக்கியின் மனிசா மாகாணம் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கு பணியில் இருந்தவர்கள் அலறிஅடித்து அங்கும் இங்குமாக ஓடினர். தீ பிடித்ததால் உள்ளே இருந்தவர்களால் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்தது. மீட்பு படைனர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு…
Read MoreYear: 2014
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலில் 29 ஆண்டுகளுக்கு பிறகு அதிக வாக்குகள் பதிவு
India has set a new record in voter turnout in the lok sabha elections 2014. இந்திய வரலாற்றில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அதிகபட்சமாக 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி துவங்கி மே 12ம் தேதி வரை 9 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அதிகபட்சமாக 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்பு 1984-85ம் ஆண்டு நடந்த தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவானது தான இதுவரை அதிகபட்ச வாக்கு சதவீதமாக இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு நடந்த 1984-85ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். இதுவரை நடந்த தேர்தல்களில் இந்த தேர்தலில்…
Read Moreதுபாயில் சாலை விபத்து : இந்தியாவைச்சார்ந்த 10 தொழிலாளர்கள் உட்பட, 15 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
10 Indians killed in a Road Accident at Dubai துபாய் : துபாயில் நடைபெற்ற ஓர் கோரமான சாலை விபத்தில், இந்தியாவைச்சார்ந்த 10 தொழிலாளர்கள் உட்பட, 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரழந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கும் துபாயில், இந்திய தொழிலாளர்கள் ஏராளமான பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த, தொழிலாளர்கள் 27 பேர் , கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு, சிறிய பேருந்தில் பயணம் செய்தனர். அப்பொழுது, எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த உழவு வாகனம் (டிராக்டர்) மீது, கட்டுமான தொழிலாளர்கள் சென்ற பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில், தொழிலாளர்கள் 15 பேர், சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில்10 பேர் இந்தியர்கள் குறிப்பாக எல்லோரும், பீகார் மாநிலத்தை…
Read Moreஇன்று அன்னையர் தினம்
Happy Mothers Day இன்று அன்னையர்களை போற்றும் வகையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ் சிறகுகள் வாசக அன்னையர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள். அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா. ஐக்கிய இராச்சியத்தில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது). தந்தையர் தினம் தந்தைகளைப் போற்றுகின்ற விடுமுறை தினமாகும். விடுமுறை தினமானது இறுதியில் மிகவும் வணிக மயமாக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் அன்னா ஜார்விஸ் உள்ளிட்ட பலரும் அதை “ஹால்மார்க் விடுமுறை தினம்” என்று கருதினர். அது மிகப்பேரளவிலான வணிகப் பயன்பாட்டினைக்…
Read Moreஇந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை ராணுவ வீரர்களள் சுட்டுக் கொன்றனர்
Two militants killed as Army foils infiltration bid in Poonch காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோடு உள்ளது. இதன் வழியாக நேற்றிரவு தீவிரவாதிகள் சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். கண்காணிப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இதுபற்றி ராணுவ அதிகாரி கூறியது: ஏப்ரல் 25, 28 மற்றும் மே 3ம்தேதிகளில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவம் பதிலடி கொடுப்பதில் கவனம் செலுத்தஆரம்பிக்கும்போது தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊருடுவ விடுவது பாகிஸ்தானின் திட்டம். ஆனால் இந்திய ராணுவம் இதை உணர்ந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் அதே நேரத்தில் தீவிரவாதிகளையும் ஊடுருவ விடாமல் தடுத்துவருகிறது…
Read Moreசென்னையில் நடக்க இருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றம்
IPL-7 matches likely to be shifted out of Chennai சென்னையில் நடைபெறவிருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் இம்முறை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். சீசன் 7 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மே 18ஆம் தேதி சென்னை அணியும், பெங்களூரு அணியும் சென்னையில் விளையாட இருந்தன. அதேபோல், 22ஆம் தேதி சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் சென்னையில் விளையாட இருந்தன. மேலும், மே 27 மற்றும் 28ஆம் தேதிகளில் ஐ.பி.எல். அரையிறுதி போட்டியும் சென்னையில் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த 4 ஐ.பி.எல். போட்டிகளும் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கேலரிகள் திறப்பு பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே போட்டிகள் நடைபெறுவதில்…
Read Moreநாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண்னை கழுத்தை நெறித்து கொலை
namakkal lady killed by unknown person நாமக்கல்லில் குழந்தையுடன் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு . ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர் வீட்டிலேயே தையல் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், திருநாவுக்கரசு புதன்கிழமை இரவு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தையுடன் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 10 மணியளவில் பிரியாவின் குழந்தை அழுது கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் பிரியா இரத்த வெள்ளத்தில்…
Read Moreகிருஷ்ணகிரி மாணவி சுசாந்தி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதலிடம்
In plus 2 exams, the Krishnagiri student Susanthi scored the first mark in the state +2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுசாந்தி 1,193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தர்மபுரி ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 1191 மதிப்பெண்கள் பெற்று, நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் துளசிராஜன் மற்றும் மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவி நித்யா ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை +2 தேர்வுகள் நடைபெற்றது. இந்த ஆண்டு 8.45 லட்சம் பேர் தேர்வு எழுதினர். +2 விடைத்தாள்…
Read Moreகோவாவில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி 3 பேர் படுகாயம்
One Dead, Three Injured in Explosion in Madgaon in Goa கோவாவில் இன்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். கோவாவில் மத்கோன் பகுதியில் குண்டு வெடித்ததாகவும் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். One Dead, Three Injured in Explosion in Madgaon in Goa One person was killed and three others injured in a blast today near Madgaon town, 40 km from Goa’s capital of Panaji. “Police have rushed to the spot and the cause of the blast is not known.…
Read Moreஇலங்கையில் திடீரென பெய்த மீன் மழை
Fish rain down on Sri Lanka village இலங்கையின் மேற்கு பகுதியில் மீன் மழை பெய்துள்ளது. இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ளது சிலா மாவட்டம். இங்குள்ள சில கிராமங்களில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது தொப் என்ற சத்தத்துடன் வீட்டின் கூரைகள் மீது ஏதோவிழுவதை அம்மக்கள் உணர்ந்துள்ளனர். இதையடுத்து வெளியே சென்று பார்த்தபோது வானத்தில் இருந்து மீன்கள் சாரை சாரையாக வந்து விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆச்சரியத்துடன் மீன்களை சேகரிக்க தொடங்கினர். 50 கிராம் எடையுள்ள ஐந்து முதல் 8 செ.மீ. நீளமுள்ள சிறிய வகை நன்னீர் மீன்கள் என்று தெரியவந்தது. பலத்த காற்றடித்தபோது ஏரிகளில் இருந்த மீனை காற்று எடுத்து வந்து கிராமத்தின் மீது வீசியிருக்கலாம். அதுதான் இந்த மீன் மழைக்கு காரணம் என்று கிராம மக்கள் கருதுகிறார்கள். இலங்கையில்…
Read More