The Supreme court will give the judgement on the case seeking ban on Jallikkattu in Tamil Nadu தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பேரவை, மிருக நலவாரியம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. ஜல்லிக்கட்டு பாரம்பரிய் அவிளையாட்டு, இதில் காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்று தமிழகம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுகளை நடத்த தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்றும் இதில் காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் காளைகள் விளையாட்டு…
Read MoreYear: 2014
பழனி அருகே தம்பதியை கட்டி போட்டு 100 பவுன் நகை திருட்டு
gang loots 100 sovereigns jewels cash from financier s house பழனி அருகே கணவன்-மனைவி யை கட்டிப்போட்டு 100 பவுன் நகை யை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றுள்ளது. பழனி அருகே உள்ள தாழையூத் தைச் சேர்ந்தவர் அப்புகுட்டி (எ) கார் த்திகேயன் (44). தி.மு.க. பிரமுகரான இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி இந்திரா (35). மகள் கள் நிவஞ்சிதா (13), அனுமிதா (9).கார்த்திகேயனின் வீடு அரண் மனை தோட்டம் என்ற இடத்தில் உள்ளது. குழந்தைகள் இருவரும் கோடை விடுமுறையையொட்டி கீதம் பட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டனர். திங்களன்று கார்த்திகேயன் அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு 9.30 மணியளவில் காரில் வீடு திரும்பியுள்ளார். இவரது மனைவி இந்திரா வாசல் கதவை…
Read Moreஇலங்கை ராணுவத்தின் கெடுபிடிகளை தாங்க முடியாமல் மீண்டும் தமிழகம் வந்த இலங்கை தமிழ் அகதிகள்
Sri Lankan refuges of 2 families arrived to Dhanushkodi today இலங்கை ராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் 10 இலங்கை தமிழ் அகதிகள் தனுஷ்கோடி வந்துள்ளனர். 2 குடும்பங்களை சேர்ந்த 10 இலங்கை அகதிகள் இன்று தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரிடம் அவர்கள் கூறும்போது, ”இலங்கை ராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் நாங்கள் தமிழகம் வந்துள்ளோம். எங்களை போல், சுமார் 2 ஆயிரம் அகதிகள் மன்னார் காடுகளில் பதுங்கி இருக்கின்றனர். மேலும் இலங்கையில், விடுதலைப் புலிகள் இருப்பதாக கூறி தமிழர்களை இலங்கை ராணுவம் தொந்தரவு செய்து வருகின்றனர்” என்றனர். Sri Lankan refuges of 2 families arrived to Dhanushkodi today. They say, more than 2 thousand…
Read Moreசென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதியின் மார்பில் குண்டு பாய்ந்த காயம்
New photos of Chennai bomb blasts victim Swathi show bullet wound on her chest. சென்னை குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதியின் புதிய படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஸ்வாதியின் மார்பில் குண்டு பாய்ந்தது போன்ற காயம் உள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 குண்டுகள் வெடித்ததில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி பரச்சூரி பலியானார், மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த இடம் மற்றும் பலியான ஸ்வாதியின் புகைப்படங்கள் அன்றே வெளியிடப்பட்டன. அதில் காயம் அடைந்த ஸ்வாதியின் முகம் மட்டும் தான் காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்வாதியின் புதிய படங்கள் மற்றும் சம்பவ இடத்தின் படங்கள் ஆகியவை தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய படங்களில் பலியான ஸ்வாதியின் மார்பில் குண்டு பாய்ந்தது…
Read Moreஇந்தியாவில் தயாரிக்கபட்ட அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி
First successful Astra test gives boost to air missile technology போர் விமானத்திலிருந்து ஆகாயத்திலுள்ள கண்ணுக்கு தெரியாத இலக்குகளை கூட தாக்கவல்ல அஸ்த்ரா ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பாலைவனத்தில், சுகோய்- 30 ரக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட அஸ்த்ரா ரக ஏவுகணை மிக துல்லியமாக இலக்கினை சென்று தாக்கியது. இதன் மூலம் இந்த ரக ஏவுகணைகளை வைத்திருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. தேஜாஸ், மிராஜ் 2000 , சுகோய் ரக போர் விமானங்களில் இருந்து இந்த ஏவுகணையை இலக்கினை நோக்கி ஏவ முடியும். அஸ்த்ரா ஏவுகணைகள் தரையில் இருந்து ஏவும் வகையிலும் வடிவைமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3.8 மீட்டர் நீளமுள்ள அஸ்த்ரா ஏவுகணை இருவகைகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்…
Read Moreமகராஷ்டிராவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து 18 பேர் பலி, பலர் காயம்; மீட்பு பணி தீவிரம்
18 killed, over 145 injured as train derails in Maharashtra மகராஷ்டிராவில் திவா-சவந்த்வாடி எக்ஸ்பிரஸ் ரயில்தடம்புரண்டுவிபத்துக்குள்ளானதில் 18 பேர்பலியாகியுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் நிதி கிராமத்தில் திவா-சவந்த்வாடி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஞ்ஜீன் மற்றும் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைவாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் ரயில் பெட்டிகளில் சிக்கியிருந்தவர்களை கிராம மக்களின் உதவியோடு மீட்டனர். இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுமென தெரிவித்த ரயில்வே அமைச்சர் மலிகார்ஜுன் கார்கே விபத்தில் பலியானவர்களுக்கு ரூ. 2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 மற்றும் சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ. 10,000 நிவாரண நிதி அளிக்கப்படுமென தெரிவித்துள்ளார். 18 killed, over…
Read Moreகின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும் 116 வயது மூதாட்டி
116-year-old Peruvian stakes claim to title of world’s oldest woman உலகின் மிக வயதான பெண்மணி என்ற புகழ்க் கிரீடம் விரைவில் வந்து சேரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், ஊடகங்களின் ஒளிமழை தன் மீது பாயப்போகும் அந்த பொன்னான நன்நாளுக்காக பெரு நாட்டை சேர்ந்த 116 வயதாகும் மூதாட்டியான ஃபிலோமெனா ட்டைபே மெண்டோசா ஆவலுடன் காத்திருக்கிறார். இந்த பட்டத்தை தற்போது தக்கவைத்துக் கொண்டிருக்கும் கின்னஸ் சாதனையாளரான ஜப்பான் நாட்டின் மிசாவொ வொக்காவா-வை விட வெறும் 3 மாதங்கள் மட்டுமே இளையவரான இவர், 20-12-1897 பிறந்துள்ளார். ’நான் போன நூற்றாண்டை சேர்ந்தவள் இல்லையப்பா… பேராண்டி, அதுக்கு முந்தைய நூற்றாண்டுக்காரி’ என்று பெருமிதம் பொங்க கூறும் இவர், தனது ஆரோக்கியத்தின் ரகசியமாக இயற்கை உணவுகளை குறிப்பிடுகிறார். உருளைக்கிழங்கு, ஆட்டுக்கறி, செம்மறியாட்டுப் பால் போன்றவை தனக்கு விருப்பமான…
Read Moreசிதம்பரத்தில் பெரும் பதற்றம் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் படுகாயம்
Crude bomb explodes in Chidambaram, 4 injured சிதம்பரத்தில் வீடு ஒன்றில் சனிக்கிழமை காலை வெடிகுண்டு வெடித்ததில் திண்டுகல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி படுகாயமுற்றார். மேலும் அந்த வீட்டிலிருந்து டிபன்பாக்ஸ் வெடிகுண்டு, துப்பாக்கி மற்றும் சீனா செல்போன் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். வீட்டில் வெடித்த வெடிகுண்டு: சிதம்பரம் மாரியாப்பாநகரில் வீடு ஒன்றில் சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. சத்தத்தை கேட்டு அருகாமையில் குடியிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். வெடிகுண்டு வெடித்ததில் வீட்டிலிருந்து திண்டுக்கல்லை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி படுகாயமுற்று தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி படுகாயம்: சிதம்பரம் மாரியப்பாநகர்…
Read Moreஒரு வயது குழந்தைக்கு ஸ்டெம்செல் தானம் கொடுத்த பெங்களூரை சேர்ந்த பொறியாளர்
Bangalore stem cell donor saves thalassemic Delhi boy மருத்துவ உலகில் மனித உயிர் காக்கும் தொழில்நுட்பங்கள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளன. அவற்றுள் ஸ்டெம்செல் எனப்படும் குருத்தணு மாற்று சிகிச்சை முறையும் ஒன்றாகும். இந்த முறை பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும்போதிலும் முன்பின் அறியாத ஒருவரைக் காப்பாற்ற முன்வரத் துணியும் மனிதர்கள் இன்னும் குறைவாகவே இருந்து வருகின்றனர். இந்த வகையான சிகிச்சைமுறையில் தலசீமியா என்ற மரபணு ஹீமோகுளோபின் நோய்க்குறைபாட்டால் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த டெல்லியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பெங்களூரை சேர்ந்த கொடையாளி ஒருவரால் உயிர் பிழைத்துள்ளான். இந்த மருத்துவ முறையில் உறவினரல்லாத ஒருவரின் நன்கொடையால் இந்தியாவில் காப்பாற்றப்பட்ட முதல் நோயாளி என்ற தகவலைப் பதிவு செய்துள்ளது. சென்ற வருடம் டெல்லியைச் சேர்ந்த கர்விட் கோயல் என்ற ஒரு வயது சிறுவனுக்கு தலசீமியா நோய்த்தாக்கம் இருப்பது உறுதி செய்த…
Read Moreஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கி 350 பேர் பலி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது தெரியவில்லை
Afghanistan landslide buries village, 2,000 missing ஆப்கானிஸ்தான் வட கிழக்கு மாநில பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 350 பேர் மண்ணுக்குள் கண் இமைக்கும் நேரத்தில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. 2 ஆயிரம் பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. ஆப்கான் பதக்ஷான் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட மலைப்பகுதி பெயர்ந்து உருண்டது. இதில் மண், கல் என அருகில் இருந்த வீடுகளை மூடிக்கொண்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 350 பேர் இறந்திருக்கலாம் என ஆப்கனில் முகாமிட்டுள்ள ஐ.நா., அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மண்ணில் புதைந்த நபர்கள் மற்றும் உயிருக்கு போராடி வருவோரை உள்ளூர் அலுவலர்கள் உதவியுடன் ஐ.நா.,…
Read More