ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கி 350 பேர் பலி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது தெரியவில்லை

Afghanistan landslide buries village, 2,000 missing

Afghanistan Landslide

ஆப்கானிஸ்தான் வட கிழக்கு மாநில பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 350 பேர் மண்ணுக்குள் கண் இமைக்கும் நேரத்தில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. 2 ஆயிரம் பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.

ஆப்கான் பதக்ஷான் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட மலைப்பகுதி பெயர்ந்து உருண்டது. இதில் மண், கல் என அருகில் இருந்த வீடுகளை மூடிக்கொண்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 350 பேர் இறந்திருக்கலாம் என ஆப்கனில் முகாமிட்டுள்ள ஐ.நா., அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மண்ணில் புதைந்த நபர்கள் மற்றும் உயிருக்கு போராடி வருவோரை உள்ளூர் அலுவலர்கள் உதவியுடன் ஐ.நா., மனித வளம் காக்கும் ஒருங்கிணைப்பு கமிட்டியினர் உதவி செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் சிக்கி 2 ஆயிரம் பேர் வரை மாயமாகி இருப்பதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார். ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
திருமண நிகழ்ச்சியில் சோகம்: இப்பகுதி கவர்னர் ஷாவாலில் அதீப், இது குறித்து கூறுகையில், திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்து கிராமத்து மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டபோது மேலும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் உயிர்ப்பலி அதிகரித்துள்ளது என்றார்.

Afghanistan landslide buries village, 2,000 missing

A landslide triggered by heavy rains buried a village in northeastern Afghanistan on Friday, leaving nearly 2,000 people missing, a top official said. Badakhshan province governor Shah Waliullah Adeeb said more than 2,000 people were missing after a hill collapsed on the village of Hobo Barik. Adeeb said the landslide buried some 300 homes in the area, about a third of all houses there.  The governor said rescue crews were working but didn’t have enough equipment, appealing for shovels. “It’s physically impossible right now,” Adeeb said. “We don’t have enough shovels; we need more machinery.”  He said authorities evacuated a nearby village over concerns about further landslides. Faziluddin Hayar, the police chief in Badakhshan province, said the landslide happened about 1 pm today. Badakhshan province, nestled in the Hindu Kush and Pamir mountain ranges and bordering China, is one of the most remote in the country. The area has seen few attacks from insurgents following the 2001 US-led invasion of Afghanistan.  Afghans living in the rugged mountains of northern Afghanistan are used to avalanches. The most deadly one in the past two years occurred in February 2010, when more than 170 people were killed at the 3,800-metre -high Salang Pass, which is the major route through the Hindu Kush mountains that connects the capital to the north.

Related posts