வயிற்றில் வளரும் சிசுவை காப்பாற்ற மாமியாரைக் கொன்ற இந்திய வம்சாவளிப் பெண்

Indian-American woman killed mother-in-law to save unborn daughter

Indian-American woman killed mother-in-law to save unborn daughter
தன் கர்ப்பத்தில் இருந்த பெண் கருவை காப்பாற்ற மாமியாரைக் கொலை செய்ததாக கைது செய்யப் பட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணை விடுதலை செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவழி அமெரிக்கப் பெண் பல்ஜிந்தர் கவுர்(39). ஏற்கனவே ஒரு பெண் குழந்தைக்கு தாயான பல்ஜிந்தர் இரண்டாவது முறையாக கருத்தரித்தார். அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை பெண் தான் என்பதை அறிந்த அவரது 68 வயது மாமியார், அதை கலைத்து விடும் படி பல்ஜிந்தரை வற்புறுத்தியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பல்ஜிந்தர் அவரது மாமியாரைக் கொலை செய்து விட்டார்.  பல்ஜிந்தர் கடந்த 26-10-2012 அன்று கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார். அவரிடம்.போலீஸ் நடத்திய விசாரணையில், வயிற்றில் இருக்கும் குழந்தையைக் காக்கவே தனது மாமியாரைக் கொன்றதாக ஒப்புக் கொண்டார் பல்ஜிந்தர். இதற்கிடையே சிறையிலேயே அவருக்கு பிரசவமும் நடந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், பெண் கருவின் உயிரை காப்பாற்ற நடைபெற்ற இந்த கொலையை தற்காப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது என நீதிபதிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து, கடந்த மாதம் 25-ம் தேதி அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட பல்ஜிந்தர் கவுர், பிறந்த வீட்டு தரப்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

Indian-American woman killed mother-in-law to save unborn daughter

An Indian-American woman, who admitted to killing her 68-year-old mother-in-law in 2012, has been released from Sutter County jail in California after a jury acquitted her of first-degree murder.  The not guilty verdict came after Baljinder Kaur’s defence lawyer Mani Sidhu argued that she killed her mother-in-law Baljit Kaur in their Yuba City, California home on Oct 24, 2012, to save her unborn girl child from gender-based infanticide.  Sidhu, local Appeal-Democrat reported, argued that Baljinder Kaur , 39, was a battered woman, whose mother-in-law abused her and sought to force the end of Kaur’s pregnancy because the baby was a female.  Kaur testified that her mother-in-law took her to get an abortion, which she avoided.  Sidhu said Kaur fought the woman to defend her unborn daughter from gender-based infanticide.  Otherwise, the child could have been another victim of the gender-based infanticide that has taken the lives of 100 million Indian girls, he said.  He said since her release, Kaur is maintaining privacy for her own safety. “She is safe and with her family.”  Baljinder Kaur was released from jail on April 25. She had been in custody since Oct 26, 2012, and gave birth to her second daughter while an inmate, according to Appeal-Democrat.  “We believe she acted in self-defence of her child,” juror Michelle Struhs, 47, of Yuba City was quoted as saying.  “We didn’t feel that our conclusion was perfect,” Struhs said. “We felt she was ‘not guilty’ rather than ‘innocent.’ We could not find her guilty based on the law.”  The murder trial began April 15 and lasted just eight days. The jury deliberated for a day and a half.  “I think there wasn’t a lot of dispute of the facts,” said prosecutor Cameron King. “Why she did it was the question.”  He said jurors just simply believed Kaur was an abused woman.  None of Kaur’s family members attended hearings leading up to the trial, and the courtroom audience was sparse over the last two weeks, Appeal-Democrat said.  When the verdict was announced, Kaur – who has worn jeans, a sweater and a thick black braid down her back – dropped her face into her hands and sobbed, the news site said.

Related posts