நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் சென்னை: பட்டா கோரிக்கை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்த நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து லோகநாதன் என்பவர் தொடர்ந்த ரிட் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. எனினும் அந்த ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா வழங்க கோரிய மனுக்கள் பரிசீலனையில் உள்ளதால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் வேணுகோபால், மற்றும் நீதியரசர் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, இவ்விவகாரத்தில்…
Read MoreTag: namakkal
நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண்னை கழுத்தை நெறித்து கொலை
namakkal lady killed by unknown person நாமக்கல்லில் குழந்தையுடன் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு . ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர் வீட்டிலேயே தையல் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், திருநாவுக்கரசு புதன்கிழமை இரவு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தையுடன் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 10 மணியளவில் பிரியாவின் குழந்தை அழுது கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் பிரியா இரத்த வெள்ளத்தில்…
Read More