சென்னை :பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சம்மந்தப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது பொது மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.பொள்ளாச்சியின்பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிறகு வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது . ஏற்கனவே திருநாவுக்கரசிடம் 4 நாட்கள் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளிட்டதால் எஸ்பி மற்றும் உள்துறை செயலாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.உயர்நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் மாணவியின் பெயரை வெளியிட்ட எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததால், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு முதலில் கீழமை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
- சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி!
- திருமண நாளன்று மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவர்
- போலி பட்டா குற்றச்சாட்டு: உயர்நீதிமன்றம் அதிரடி பரிந்துரை
- ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு ஆண்டுக்கு 40 நாள் சாதாரண விடுப்பு: இரண்டு தவணைகள், ஓராண்டு விதி எப்படிச் செயல்படும்? உயர் நீதிமன்றம் விளக்கம்
- தனியார் பள்ளி, கல்லூரி, வேலையளிப்போர் விண்ணப்பங்களில் சாதி விவரம் கட்டாயமா? சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- கைதுக்கான காரணங்களை எழுத்தில் தராவிட்டால் என்ன ஆகும்? சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது, உங்கள் உரிமைகள்
- மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள்: ₹1,439 கோடி குடிநீர்த் திட்டம் உட்பட முழுப் பட்டியல்
← முந்தைய செய்தி: போலி பட்டா குற்றச்சாட்டு: உயர்நீதிமன்றம் அதிரடி பரிந்துரை
அடுத்த செய்தி →: சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி!

