மதுரை:நெல்லையைச் சேர்ந்த சண்முகவேல் பொறுப்பில் அவரது சகோதரர் தனது சொத்துக்களை ஒப்படைத்து விட்டு மும்பைக்கு சென்றுள்ளார். சகோதரர் மும்பையில் வசிப்பதால் சண்முகவேல் நிர்வகித்து வந்துள்ளார் . அவரது சகோதரர் சொத்துக்களுக்கு அரசு அதிகாரிகள் போலி பட்டா தயாரித்து இன்னொருவர் பெயருக்கு மாற்றிவிட்டதாக சண்முகவேல் புகார் அளித்து , போலி பட்டா மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை கிளை உயர்நிதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரர்களின் புகார் குறித்து விசாரித்து 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு பிறகு போலி பட்டா தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.போலி பட்டா புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஜூலை 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வரும்காலத்தில் போலி பட்டா தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
- கோவை எஸ்.பி மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை
- சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி!
- அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
- மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள்: ₹1,439 கோடி குடிநீர்த் திட்டம் உட்பட முழுப் பட்டியல்
- தாராபுரத்துக்கு ரூ.1,439 கோடி காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு முதல்வர் விஜய் அறிவித்த திட்டங்கள் முழு பட்டியல்
- ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெங்காய விற்பனைக்குக் கிலோவுக்கு ரூ.2 ஊக்கத்தொகை: கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு முடிவு என தகவல்
- சென்னையில் கனமழை: அமைச்சர்களை உடனே சென்னை திரும்ப முதல்வர் விஜய் உத்தரவு – சிவப்பு எச்சரிக்கை, 3 என்டிஆர்எஃப் குழுக்கள், 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
← முந்தைய செய்தி: அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
அடுத்த செய்தி →: கோவை எஸ்.பி மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை

