district collectors and other IAS officers shuffled again in tamilnadu
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, மதுரை உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்கள்.
இது சம்பந்தமாக தமிழக அரசு வெள்யீடு செய்துள்ள செய்திக்குறிப்பினில் அறிவித்துள்ளதாவது:-
மதுரை மாநகராட்சி கமிஷனராக இருக்கும் நந்தகோபால் தற்போது வேலூர் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கோவை மாவட்ட ஆட்சியாளராக உள்ள எம். கருணாகரன் மாற்றப்பட்டு நெல்லை கலெக்டர் சி.சமயமூர்த்திக்கு பதில் அந்த மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கபட்டிருக்கிறார். நீலகிரி மாவட்ட ஆட்சியாளராக உள்ள அர்ச்சனா பட்நாயக், கோவை ஆட்சியாளராக நியமிக்கபட்டிருக்கிறார். கோவை ஆட்சியாளராக இருந்த கருணாகரனுக்கு பதிலாக இவர் நியமிக்கபட்டிருக்கிறார். வேலூர் மாவட்ட ஆட்சியாளராக மதுரை மாநகராட்சி கமிஷனராக இருந்த நந்தகோபால் நியமிக்கபட்டிருக்கிறார். வேலூர் மாவட்ட ஆட்சியாளராக இருந்த டாக்டர். ஆர்.சங்கர் நீலகிரி மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கபட்டிருக்கிறார். தஞ்சை ஆட்சியாளராக இருந்த பாஸ்கரன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கபட்டிருக்கிறார். தஞ்சை மாவட்ட ஆட்சியாளராக தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குனராக இருந்த டாக்டர் என். சுப்பையன் நியமிக்கபட்டிருக்கிறார்.
இவ்வாறு அந்த அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.