91 pc of X-Ray units in country without registration
இந்தியாவில் செயல்பட்டுகொண்டிருக்கும் 91 சதவிகிதமான எக்ஸ்-ரே நிலையங்கள் முறையாக பதிவு செய்யாமல் செயல்படுகிறது என்று, பொது கணக்கு கமிட்டி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவ சோதனைக்காக செயல்பட்டுகொண்டிருக்கும் எக்ஸ்-ரே எடுக்கும் நிலையங்கள், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடமிருந்து முறையாக பதிவு செய்து கொண்டு, அனுமதி வாங்கவேண்டும். இந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் தான், இந்தியாவில் உள்ள எக்ஸ்ரே நிலையங்களுடைய செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துகின்றது. இந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தினுடைய செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வெளியிட்டிருக்கிறார். இதை, பி.ஏ.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாராளுமன்றத்தின் பொது கணக்கு கமிட்டி ஆய்வு மேற்கொண்டது.
பொது கணக்கு கமிட்டி ஆய்வில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துதிருக்கிறது. இந்தியாவில் தற்சமயம் மருத்துவ பரிசோதனைக்காக சுமார் 57,443 எக்ஸ் ரே எடுக்கும் நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் 5,270 எக்ஸ் ரே எடுக்கும் நிலையங்கள் சரியான முறையில் பதிவு பெற்று அனுமதி வாங்கியிருக்கிறது. எந்த வித பதிவும் செய்யாமல் அனுமதியின்றி இயங்கிகொண்டிருக்கும், 52,173 எக்ஸ் ரே நிலையங்களில், பெரும்பான்மையானவற்றில் பழைய பழுதடைந்த எக்ஸ் ரே கருவிகளே பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவிகள் மனிதர்களுடைய உடலுக்கு மாபெரும் தீங்கு உண்டாக்கும். தேவையான ஊழியர்களும் அதிகாரிகளும் ஒழுங்குமுறை வாரியத்திற்கு இல்லாததால், எக்ஸ் ரே எடுக்கும் நிலையங்களுடைய செயல்பாடுகளை கண்காணிக்க இயலவில்லை.
இந்த ஒழுங்குமுறை வாரியத்தில், விஞ்ஞானிகளும் இன்ஜினியர்களும் மொத்தம் 300 பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். மருத்துவ பரிசோதனைக்காக எக்ஸ் ரே எடுக்கும் நிலையங்களை ஒழுங்குமுறை ஏற்படுத்த, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், அணு கதிரியக்க பாதுகாப்பு இயக்ககம் அமைத்து செயல் படும்படி உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவினை கேரளம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் மட்டும் தான் செயல்படுத்திஇருக்கின்றன. மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
91 pc of X-Ray units in country without registration
Over 52,000 X-Ray units in india, accounting for almost 91 % of the total are operated without registration. It is essential to get first registered with the nuclear regulator. This is pinted out by a Public Accounts Committee (PAC).